Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

தவறான வீடியோக்களை இனி பார்க்கவேண்டாம்..! மகளிர் கல்லூரியில் ஏடிஜிபி ரவி பேச்சு

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில் ஏடிஜிபி தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது...

தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட ஆபத்துகளை தடுக்க காவல் துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும், அதற்கான முக்கியத்துவம் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் நிறுவனங்களில் போலீசார் நடத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளில் போலீசார் தரப்பில் பெண்கள் குறித்த பாதுகாப்பை காட்டிலும் அதிகப்படியாக பேசுவது ஆபாச படங்களை குறித்துதான். அவர்களுடைய கூற்றுப்படி குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் சீண்டலுக்கு ஆபாச படங்களும் முக்கிய காரணம் என்கின்றனர்.

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் போக்சோ வழக்கிலும் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கைது செயய்யப்பட்டவர்தான் திருச்சி கிறிஸ்டோபர் அல்போன்ராஜ்.

இந்த அதிரடி நடவடிக்கைகளில் அடித்தளம் இட்டவர் ஏடிஜிபி ரவி. காவலன் செயலி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இவர் சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் தலைமையேற்று நடத்தினார். அப்போது காவல் செயலியை பெண்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை குறித்து பேசினார்.

அதாவது, கூகுள் பிளேஸ்டோரில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு அந்த செயலிக்குள் நுழைந்தால் ஏழு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியாக பதிலளித்த பின்பு செயலியின் சேவை தொடங்கிவிடும்.

எப்போதெல்லாம் பெண்களுக்கு ஆபத்து நேரிட்டாலும் காவலன் செயலியில் இருக்கும் சிகப்பு நிற பொத்தானை அழுத்தினால், உடனே அருகில் இருக்கும் காவல் நிலையம் அல்லது கட்டுப்பாட்டு அறைக்கு ஆபத்து ஒலி அடித்துவிடும். குறிப்பாக செயலியை பயன்படுத்தும்போது நீங்கள் இருக்கும் லொகேஷனை ஆன் செய்வது அவசியம்.

இவ்வாறு காவலன் செயலியை குறித்த விவரங்களை எடுத்து கூறிய ரவி, ஆபாச படங்களை பார்ப்பவர்களை குறித்து சிலவற்றை பேசினார். அதாவது, ஏற்கெனவே ஆபாச படங்களை தவறுதலாக பார்த்தவர்களை காவல் துறை ஒன்றும் செய்யாது. அவர்கள் பயப்பட வேண்டாம். ஆனால் படிக்கும் வயதில் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற சிந்தனைகள் வரக்கூடும். அது பெரிய குற்றங்களுக்கு வழி வகுக்கும் என்று அறிவுரை வழங்கினார்.

நாட்டில் ஆபாச படங்களை பார்பவர்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆண்களால் பெண்களுக்கு ஆபத்து வருவது போல, ஆண்களுக்கும் ஆபத்துகள் உள்ளன. இரவில் தனியாக வரும் ஆண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளதா என்பதும் உறுதி படுத்தக்கூடியதுதான்.

தனியாக ஆபத்தில் சிக்கும் ஆணுக்கு ஒரு எதிரியாக பெண்களாவும் இருக்கலாம் அல்லது கொள்ளையர்களாவும் இருக்கலாம். அவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் பொதுவான பாதுகாப்பினை வழங்காலாமே என பலரின் கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக