Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.!

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.!


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, இப்பகுதியில் எந்த பணியும் தொடங்கவில்லை என்றும் உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் ஜெம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதனை ஏற்றுக்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் போது மனுதாரர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!