Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 டிசம்பர், 2019

நவகிரகம் இருக்கும் இடங்களும்.. அதன் பலன்களும்...!!

 Image result for நவகிரகம்
நவகிரகம்....!!
நவகிரகங்கள்தான் ஒரு மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது. இந்த நவகிரகங்களின் அமைப்பால் அவர்களுக்கு நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கின்றன. ஒருவர் முற்பிறவியில் செய்த நற்செயல்கள் இப்பிறவியில் நன்மைகளாகவும், முற்பிறவியில் செய்த தீமைகள் இப்பிறவியில் தோஷங்களாகவும் ஜாதகத்தில் வந்தடையும்.

 நவகிரகங்கள் தோன்றிய காலத்திலேயே நவதானியங்களும் தோன்றிவிட்டன. நாம் நவதானியங்களைக் கொண்டுதான் நவகிரகங்களை சாந்தப்படுத்துகிறோம். மேலும், நமது உடலும் நவகிரகங்களால்தான் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பகுதியில் தங்களது சேவையைச் செய்கின்றன.

 நமது வாழ்க்கைப்பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழி நடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர்.

கிரகங்கள் என்பவை யாவை?

 படைத்தல், காத்தல், அழித்தல் என பரம்பொருள் இருக்க, நவகிரகங்களுக்கு அவசியம் என்ன? மனித சரீரம் என்ற தேசத்திற்கு சகலோக நாயகரான பரம்பொருளே தலைவர் எனினும், அந்தச் சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அவர் அதிகாரியாக நியமித்து இருக்கிறார்.

 அவ்வாறு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மங்களில் செய்த வினையை வைத்து அதற்கு தகுந்த பலன்களைத் தத்தம் தசாபுத்திகள் நடக்கும்போது கொடுத்து வருகின்றனர்.

சூரியன் தந்தை (ஆத்மா, எலும்பு).

சந்திரன் தாய் (மனம், இரத்தம்).

செவ்வாய் மற்றும் ராகு சகோதரர்கள் (பலம், மஜ்ஜை).

புதன் தாய்மாமன் (வாக்கு, தோல்).

குரு புத்திரக்காரன் (ஞானம், தசை, மாமிசம்).

சுக்கிரன் களத்திரக்காரகன் (காமம், இந்திரியம்).

சனி, கேது ஆயுள் (துக்கம், நரம்புத் தசை).

நவகிரகம் இருக்கும் இடமும், அதன் பலன்களும் :

 ராசிக்கட்டத்தில் நவகிரகங்கள் தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கின்றன. ஒரு சில இடங்களில் நவகிரகங்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடங்களில் இருக்கும் கிரகத்தினால் நற்பலனும், சில இடங்களில் கிரகத்தின் வலிமையும், பலமும் குறைவதினால் அசுப பலன்களையும் அளிக்கின்றார்கள்.

 கிரகங்களின் பலன்களை அறியும் பொழுது நாம் பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு நமது ஜாதகத்தில் நாம் பலன் காண வேண்டும். அப்பொழுதுதான் நாம் எடுத்துச் சொல்லும் பலனானது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைக்கு ஏற்ப நல்ல நிலைமையில் இருக்கும்.

எந்தவொரு ஜாதகத்திலும் லக்னம் என்பது முதல் இடமாகும். அவ்விடத்தில் இருந்தே நாம் கிரகம் நிற்கும் இடத்தை நிர்ணயிக்க வேண்டும்.

நாளைய பகுதியில் ஒவ்வொரு வீடுகளில் ஒரு கிரகம் இருந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக