வீரமும், விவேகமும் கொண்டு செயல்படும்
தனுசு ராசி அன்பர்களே...!
மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில்,
சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க
இருக்கின்றது.
ராசி அதிபதியான குருபகவான் உங்கள்
ராசியில் பல கிரகங்களுடன் இணைந்து இருக்கும் இந்த தருவாயில் இந்த புது வருடமானது
துவங்க இருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எண்ணங்கள்
மேம்படும்.
மனதில் அவ்வப்போது தேவையில்லாத
சிந்தனைகளால் கவலைகள் தோன்றி மறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி
மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகளால்
மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளால் பொருட்சேர்க்கை
உண்டாகும். எந்தவொரு வேலை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது
எதிர்பார்த்த முன்னேற்றத்தை அளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
:
அரசியல்வாதிகளுக்கு பலதரப்பட்ட
மக்களின் தொடர்பு மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும்போது
கோபங்களை காட்டாமல் புன்னகையுடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை
அதிகப்படுத்தும்.
விவசாயிகளுக்கு
:
பயிர் விளைச்சலில் எதிர்பார்த்த இலாபம்
சற்று காலதாமதமாக கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் அலைச்சலுக்கு பின் சாதகமாக
அமையும்.
வியாபாரிகளுக்கு
:
கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்த
மாதிரி அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் தொழில் சார்ந்த ரகசியங்கள்
பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக
அமையும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு
:
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான
சூழல் உண்டாகும். தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள்
சாதகமாக அமையும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு விருப்பப்பட்ட கல்வி
கிடைக்கும்.
பெண்களுக்கு
:
தம்பதிகளுக்கு அவ்வப்போது சிறு சிறு
கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு,
சம்பள உயர்வு கிடைக்கும். மனதில் இருக்கும் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் கவலைகளை
பெற்றோர்களிடம் கலந்துரையாடி தெளிவு பெறவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
:
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து
கொண்டிருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடம்
ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான
செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
கலைஞர்களுக்கு
:
நிதானத்துடன் செயல்பட்டால் கிடைக்கும்
வாய்ப்புகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். அவ்வப்போது ஏற்படும் மறைமுக
எதிர்ப்புகளால் காலதாமதம் உண்டாகும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். வெளியூர்
தொடர்பான வாய்ப்புகள் உண்டாகும்.
பரிகாரம்
:
சயன கோலத்தில் காட்சி அளிக்கும்
பெருமாளை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர மனத்தெளிவு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக