அண்மையில் ஆபாச படம் பார்த்தவர்களில்
இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகி
அதிர்ச்சிக்குளாகியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்
செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது செய்யபட்டு அவர்களுக்கு தண்டனை
வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்தது.
அதே போல முதற்கட்டமாக குழந்தைகள் ஆபாச
படம் பதிவேற்றம் செய்தவர்கள், பகிர்ந்தவர் என 3000 பேர் லிஸ்ட் போலீசாரிடம்
இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது திருச்சி
பாலக்கரையை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை போக்ஸோ
சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் 3 போலி பேஸ்புக் கணக்கு மூலம்
குழந்தைகள் ஆபாச விடியோவை பதிவேற்றம் செய்துள்ளார் என புகார் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்தததில் தமிழகத்தில் முதல் நபராக கிறிஸ்டோபர்
அல்போன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக