Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 டிசம்பர், 2019

திருப்பதியில் பதற்றம்... வருவாய்த்துறை அதிகாரிகள் எனக் கோயிலுக்குள் நுழைந்த கும்பலால் பரபரப்பு!

ருவாய்த் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு மர்ம நபர் ஒருவர் மிக முக்கிய நபர்கள் பெறும் தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றவரைகளைத் தேவஸ்தான அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்திய வருவாய்த் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு ஒரு கும்பலுடன் சாமி தரிசனம் செய்ய, மிக முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் செல்ல முயன்றவர்களைத் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு கே.வி ரத்னா என்பவர் சிலரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அங்கு, தேவஸ்தான போர்டு அதிகாரிகளிடம் தான் இந்திய வருவாய்த் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

பின் தேவஸ்தான அதிகாரிகளிடம், தனக்கும் தன்னுடன் வந்திருப்பவர்கள் அனைவருக்கும், மிக முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வேண்டும் என்றும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய வருவாய்த் துறை அடையாள அட்டையை ரத்னா எனக் கூறிக் கொண்டவர் காட்டியதில் நம்பிக்கை ஏற்படவே தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு சாமி தரிசனத்திற்கான டிக்கெட்களை வழங்கியுள்ளனர். இதைப் பெற்றுக் கொண்ட ரத்னாவும், அவரது கூட்டாளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றுவிட்டு, சாமி தரிசனம் செய்ய மிக முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் நின்றுள்ளனர்.
திருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த் துறை அதிகாரிகள்!

இதற்கிடையில், ரத்னா என்பவர் மீது தேவஸ்தான நிர்வாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்த அந்த கும்பலைத் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மறித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் போலி அடையாள அட்டையைக் காண்பித்து சாமி தரிசனத்திற்கு முயன்றுள்ளது தெரியவந்தது.

மேலும் ரத்னா கும்பலிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. திருப்பதிக்குத் தீவிரவாதி அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மர்ம நபர்களின் இந்த செயல் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனால், பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக