Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 டிசம்பர், 2019

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை!


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது.
இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை என சத்தீஸ்கர், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அறிவித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அரசியல் சாசனம் 7 வது அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டதால் மாநிலங்கள் இச்சட்டத்தை நிராகரிக்க அதிகாரம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக