Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 டிசம்பர், 2019

துக்க காரியத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்.!

துக்க காரியத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்.!


சென்னை பள்ளிகாரணையில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி அஞ்சலி .இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து  உள்ளது .இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அய்யனார் உறவினர் ஒருவரின் துக்க காரியத்திற்கு வருமாறு தனது மனைவி அஞ்சலியை அழைத்து உள்ளார்.ஆனால் அஞ்சலி துக்க காரியத்திற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கணவன்-மனைவிக்கு இடையே  தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது அஞ்சலியை தாக்கிய அய்யனார். தகராறில் மனைவி கழுத்தை நெறித்து உள்ளார்.இதில் மயங்கி விழுந்த அஞ்சலி சம்பவ இடத்திலே இறந்து உள்ளார்.இதை தொடர்ந்து அய்யனாரை கைது செய்த பள்ளிகாரணை போலீசார் உயிரிழந்த அஞ்சலி உடலை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக