Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

குழந்தைங்க சாப்பிடாம அடம் பிடிக்குதா?... என்ன பண்ணினா சமத்தா சாப்பிடுவாங்க...

Image result for குழந்தைங்க சாப்பிடாம அடம் பிடிக்குதா?... என்ன பண்ணினா சமத்தா சாப்பிடுவாங்க...
வ்வளவு வேலையை வேண்டுமானாலும் சிரமம் பார்க்காமல் செய்து விட முடியும். ஆனால் குழந்தைகளை சமாளிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் அவர்களை சாப்பிட வைப்பதை விட பெரிய டாஸ்க் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி அசால்டாக சாப்பிட வைப்பது என்பது பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
குழந்தையை சமாளிக்க முடியலையா?
என்னதான் பார்த்து பார்த்து ஆரோக்கியமாகவும் ருசியாகவும் உங்கள் குழந்தைக்கு சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிட மாட்டேன் அடம் பிடிக்கிறார்களா?... அந்த சமயத்தில் உங்களுக்கு கோபம் வரலாம். ஆனாலும் குழந்தைகள் மேல் காட்ட முடியாது. அதைவிட அவர்கள் எதையும் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்களே என்ற வருத்தம் தான. அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கும், அவர்களுடைய உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்காகவும் தான் நாம் உணவு கொடுக்கிறோம் என்பதெல்லாம் இந்த சிறு வயதில் புரியாது. அவர்களுக்கு சாப்பிடுவது என்பது ஒரு வேலை. அதனால் அவர்களுடைய இயல்பிலேயே கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். என்ன செய்தால் குழந்தைகளை ஈஸியாக சாப்பிட வைத்து விடலாம் என்று பார்க்கலாம்.
இஷ்டத்துக்கு விடுங்கள்
எப்போதுமே குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்யும் போது அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள். அதை அவர்கள் சாப்பாட்டு விஷயத்திலும் முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கும் உணவுகளைப் பற்றிய ஆரோக்கிய விஷயங்களை அவர்களுடைய மனதைக் கவரும் வகையில், கதைகளைப் போல எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயம் அவர்களுக்கு அந்த உணவின்மீது ஆர்வம் வரும். அடுத்த முறை அந்த உணவை பார்த்தாலே அதன்மீது அவர்களுடைய கண்ணும் கையும் பாய்ந்து செல்லும்.
​​சில வகைகள்
ஒரே ஒரு உணவை மட்டும சமைத்து குழந்தைக்கு முன் கொண்டு செல்லாதீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட, வேறு வேறு சுவை கொண்ட சிலவற்றை (அது பழங்கள், நட்ஸ்) என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை குழந்தைகள் முன் வைத்து, அவர்களுக்கு பிடித்த உணவை, அவர்களையே தேர்வு செய்யச் சொல்லுங்கள். அவர்களுடைய விருப்பத்தில் நீங்கள் உள் நுழையாமல் இருப்பதே நல்லது.
பள்ளி செல்லும் குழந்தைகள்
பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளாக இருந்தால், மாலையில் பள்ளி முடித்து வரும்போது மிகவும் களைப்பாகவும் பசியாகவும் இருப்பார்கள். அந்த சமயங்களில் அவர்கள் வருவதற்கு முன்னதாகவே ஆரோக்கியமான ஏதாவது சிற்றுண்டி சமைத்து வைத்திருங்கள். அந்த சமயங்களில் பசியில் கேள்விகள் எதுவும் கேட்காமல் சாப்பிடுவார்கள். ஆனால் சுவைக்கு நீங்கள் கியாரண்டி கொடுக்க வேண்டும்.
சமையலில் உதவி
விடுமுறை நாட்கள் அல்லது இரவு நேர சமையலின் போது, குழந்தைகளை உங்களுடன் கிச்சனுக்கு அழைத்துச் செல்லுங்கள். அம்மாவுக்கு தனியா சமைக்க போரடிக்குது. எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்களேன் ப்ளீஸ்னு கேளுங்க. உங்க குழந்தை உடனே ஓடி வரும். அங்கு உங்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடும்போது, சமையல் என்பது எவ்வளவு கடினமான வேலை, அம்மா நமக்காக எவ்வளவு சிரமப்படுகிறார். நாம் அதை வீணாக்குகிறோம் என்ற மனநிலை குழந்தைக்கு சிறுவயதிலேயே வரும்.
நோ கார சாரம்
நீங்கள் வீட்டில் சாப்பிடுவது போலவே குழந்தைக்கு காரம், புளிப்பு, கசப்புத் தன்மை கொண்ட உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதனால் அவர்களுக்கு உலர்ந்த பழங்கள், பால், பிரெஷ்ஷான பழங்கள், பழச்சாறு, பருப்பு, வேகவைத்த முட்டை இப்படி கொடுங்கள். நமக்காக அம்மா ஸ்பெஷலாக கொடுக்கிறார் என்று குழந்தை ஆர்வமாக சாப்பிடும்.
தானியக்கூழ்
இப்போதெல்லாம் நாமே தானியங்களை நம்முடைய உணவில் சேர்ப்பதில்லை. பிறகு குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள். ஆனால் நிச்சயம் குழந்தைகள் உணவில் தானியங்கள் இடம்பெற வேண்டும். அதனால் எல்லா தானியங்களையும் கலந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு அரைத்து வைத்துக் கொண்டு, காலை அல்லது இரவு நேர உணவுகளில் தானியக்கூழ் செய்து கொடுங்கள். திட வடிவ உணவுகளை விடவும் திரவ உணவுகளை குழந்தைகள் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக