சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பால் கொடுக்கப்படும். அப்படி ஒரு பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றி கொடுத்த அவலம் அரங்கேறியது.
இந்நிலையில் மீண்டும் ஒரு அவலம் உத்திரபிரதேசத்தில் நடந்து உள்ளது.உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள ஒரு அரசு இடைநிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உணவு முசாபர்நகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள ஹப்பூரில் கல்யாண் சன்ஸ்தா என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.இந்த உணவை சாப்பிட்ட ஒன்பது மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Dead rat found in the mid day meal of students in #Muzaffarnagar. Reports @scribe_prashant @CMOfficeUP @myogiadityanath @Uppolice @muzafarnagarpol pic.twitter.com/xJ7HHK87Zb
— Sanjay Jha (@JhaSanjay07) December 3, 2019
இதுகுறித்து ஒரு மாணவர் கூறுகையில் ,பாத்திரத்தில் இருந்த பருப்பை எடுத்து கொடுத்து இருந்த போது அடிப்பகுதியில் எலி இருந்ததாக கூறினார்.இந்தவிவகாரம் குறித்து முசாபர்நகர் மாவட்ட நீதிபதி அப்பகுதியில் மதிய உணவை கண்காணிக்கும் குழுவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கைபதிவு செய்ய உத்தரவு விட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக