Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜனவரி, 2020

ஒவ்வொரு வீட்டிற்கும் குப்பை எடுக்க ரூ.100 முதல் ரூ.5000 வரை: சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

 



சென்னையில் குப்பை சேகரிக்க மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள வீடுகளில் குப்பைகளை சேகரிக்க ரூபாய் 10 முதல் 100 வரையிலும், கடைகளில் குப்பைகளை சேகரிக்க ரூபாய் 500 முதல் ரூபாய் ஆயிரம் வரையிலும், தியேட்டர்களில் குப்பையை சேகரிக்க ரூபாய் 750 முதல் ரூபாய் 2000 வரையிலும் நட்சத்திர விடுதிகளில் குப்பைகளை சேகரிக்க ரூபாய் 3 ரூபாய் வரையிலும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்க ரூபாய் 1000 முதல் 5000 வரை வசூலிக்க சென்னை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

அதேபோல் தனியார் பள்ளிகளில் ரூ 3000 வரையிலும், மருத்துவமனைகளில் 4000 வரையிலும், பொது நிகழ்ச்சிகளில் ரூபாய் 20 ஆயிரம் வரையிலும் குப்பைகளை சேகரிக்க சென்னை மாநகராட்சி வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் மக்கும், மக்காத குப்பையை பிரிக்காமல் குப்பை கொட்டினால் ரூபாய் 100 முதல் 5000 வரை அபராதம் விதிக்கவும், கட்டிட கழிவுகளை கொட்டினால் 5000 வரை அபராதம் விதிக்கவும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் துபாய் 100 வரை அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது

இது குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்றும் மூன்று மாதத்திற்குள் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

சென்னையில் ஏற்கனவே முறைவாசல் என்று வாடகைக்கு இருப்பவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளர்கள் பெற்று வரும் நிலையில் தற்போது குப்பையை கொட்டவும் மாநகராட்சிக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக