
சமீபத்தில் அமல் செய்யப்பட்ட குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால்
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக
குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில்
பெங்களூரில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் சிலர் குடி இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு
பகுதியில் உள்ள 100 வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து
தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த
குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வங்கதேசத்திலிருந்து
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் இந்த வீடுகள் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி
நிர்வாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
இருப்பினும்
இந்த இடத்தின் உரிமையாளர் இது குறித்து கூறிய போது இங்கு குடியிருந்த யாரும் வங்க
தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வடக்கு கர்நாடகம் மற்றும் வட இந்தியா
வடகிழக்கு இந்தியாவில் உள்ள உள்ளவர்கள்தான் என்றும் அதற்குரிய ஆவணங்கள் இருந்தும்
போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து விட்டனர் என்றும் இது
குறித்து நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது
வங்கதேசத்திலிருந்து
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறப்பட்டு 100 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளது
பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக