Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

சீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு! 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா


Image result for கொரோனா"
சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,711 ஆக அதிகரித்துள்ளது என சீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபே மாகணத்தின் முக்கிய நகரான வுஹான் நகரில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மாநகரமே மரண பீதியில் இருக்கிறது.
அங்குதான் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பாதிக்கப்படுவதும் அதிகமாக உள்ளது. வுஹான் நகரம் முழுவதும் சீனாவின் மற்ற பகுதியில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க சீனா அந்த நகரத்துடனான போக்குவரத்தை துண்டித்துள்ளது. விமான போக்குவரத்தையும் துண்டித்துள்ளது.
நான்கில் ஒருவர்
எல்லை மீறி சென்றுவிட்ட நிலையில் சீன அரசால் கொரோனா வைரஸை தடுக்க முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் நான்கில் ஒருவரின் உடல் நிலை மோசமடைகிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது. மற்றவர்கள் குணமடைகிறார்கள். இதுவரை சீனாவில் 170 பேர் முழுயைமாக குணமடைந்திருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பில் தைபேயில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 பேருக்கு சோதனை
சீனாவில் ஒரு புறம் என்றால், ஜப்பானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பீதி எழுந்துள்ளது. ஜப்பானின் சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவலின் படி, வுஹானில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 200 ஜப்பானிய நாட்டினரில் மூன்று பேர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். ஆனால் மூன்று ஜப்பானியர்களுக்கும் எந்த அறிகுறியும் காட்டவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.13 வரை மூடல்
பிப்ரவரி 13 ஆம் தேதி நள்ளிரவு வரை வணிகங்கள் மீண்டும் பணிகள் தொடங்கக்கூடாது என்று சீனாவின் ஹூபே அதிகாரிகள் புதன்கிழமை இரவு அறிவித்தனர். இது சந்திர புத்தாண்டு விடுமுறையை நாடு முழுவதும் பிப்ரவரி 2 வரை மூன்று நாட்கள் நீட்டித்து சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. ஷாங்காய், பெய்ஜிங், சோங்கிங், அன்ஹுய், போன்ற நகரங்களில் பிப்ரவரி 9 நள்ளிரவு வரை வணிகங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்கக்கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைகளை மூடியது
கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சீனாவில் உள்ள 30 கடைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளதாக உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் சில்லறை விற்பனை நிலையமான ஐக்கியா தெரிவித்துள்ளது. சீனாவின் கால்பந்து அசோசியேன் 2020 சீசனுக்கான உள்நாட்டு கால்பந்து போட்டிகளை அனைத்து மட்டங்களிலும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக