Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜனவரி, 2020

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.! ஒரே நேரத்தில் 17 ஆடுகள், ஒரு மாடு..நடந்தது என்ன.?

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.! ஒரே நேரத்தில் 17 ஆடுகள், ஒரு மாடு..நடந்தது என்ன.?



துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அதே ஊரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் அருகே உள்ள காட்டு பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேய்ச்சலை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஆடுகள் வீட்டில் இருந்த தண்ணீரை அருந்திய சிறிது நேரத்திலேயே துடிதுடித்து அடுத்தடுத்து உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிரிச்சியடைந்த ஜெயப்பிரகாஷ் அருகில் இருப்பவர்களிடம் தகவல் கூறினார். அப்போது அந்த வழியாக தனது மாட்டை அழைத்துக்கொண்டு வந்த ராமு என்பவர் ஆடுகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
இதனிடையே ஆடுகள் அருந்திய தண்ணீரை ராமுவின் மாடும் அருந்தி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த உத்தப்பநாயக்கணுர் போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் செந்தாமரை ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக