
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 ஆம்
தேதிக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ்
பஸ்வான் தெரிவித்துள்ளார்!!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்
நாடு முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய
அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின்
மூலம் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி
கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஏற்கனவே 16 மாநிலங்களில்
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் 12 மாநிலங்களில் ஜூன் 1
முதல் இத்திட்டம் முழுமையாக அமுலுக்கு வருகிறது. ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா,
கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலுங்கானா, திரிபுரா, குஜராத்,
ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் முழுமையாக அமுலுக்கு வருகிறது.
பீகார், UP, ஒடிஷா மற்றும் சத்தீஸ்கரில் சில பகுதிகளில் இத்திட்டம்
செயல்படுகிறது.
இங்கும் முழுமையாக இத்திட்டம்
செயல்படும். 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 35 கோடி பயனாளிகள் இத்திட்டத்தால்
பயனடைவர். மேலும் 8 மாநிலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு
ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்....
'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' திட்டம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும்
ஏழைகளுக்கு நன்மைகளை வழங்கும். 81 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள்,
ஏனெனில் கோதுமைக்கு கிலோ 2 ரூபாயும், அரிசி கிலோவுக்கு ரூ .3 ரூபாயும் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி நாடு முழுவதும் நன்மைகளைப் பெற அதே ரேஷன்
கார்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
'One Nation, One Ration Card' scheme to be implemented by June 1 across
India: Ram Vilas Paswan
Read @ANI Story | https://t.co/h057bwyxMo pic.twitter.com/lWQIFBb9XX
— ANI Digital (@ani_digital) January
21, 2020
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1ஆம்
தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். இதனடிப்படையில் பயனாளிகள்
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக