
இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முன்னணி
நிறுவங்களாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் செயல்பட்டு
வருகின்றன. இ-காமர்ஸில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும்,
இந்த இரு நிறுவனங்களே இந்தியாவின் பிரபலமான நிறுவனங்களாக இருக்கின்றன.
பிளிப்கார்ட் அறிவிப்பு
இவை வாடிக்கையாளர்களுக்கு தேவையான
அனைத்துப் பொருட்களையும், அவர்களின் வீட்டின் வாசலுக்கே கொண்டு சேர்க்கும் பணியைச்
செய்து வருகின்றன. இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் அதன் டெலிவரி
வாகனத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தது.
40 சதவீதம் மின்சார வாகனங்கள்
அதன்படி, அந்நிறுவனம் பயன்படுத்தி
வருகம் டெலிவரி வாகனங்களில், 40 சதவீதம் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு
வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகயை வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச்
மாதத்திற்குள் நிறைவு செய்யவிருப்பதாக அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
பார்சல் சர்வீஸ் டிரான்ஸ்போர்ட்
சமீபத்தில் வர்த்தக ரீதியாக இயங்கும்
வாகனங்கள், அதாவது கால் டாக்ஸி, பார்சல் சர்வீஸ், டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட
துறைகளைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள், அதன் வாகனங்களை வருகின்ற 2025ம்
ஆண்டிற்குள் 40 சதவிகிதம் மின் வாகனங்களாக மாற்ற உத்தரவிடப்பட்டது.
கால் டாக்ஸி, ஓலா மற்றும் ஊபர்
அதிலும், மிக முக்கியமாக, நாட்டின்
முன்னணி கால் டாக்ஸி நிறுவனங்களான ஓலா மற்றும் ஊபர் ஆகிய இரு நிறுவனங்களும் இதை
நடைமுறையில் கொண்டு உத்தரவிடப்பட்டது.
10,000 மின்சார வாகனங்கள் இலக்கு
இந்த நிலையில் அமேசான் இந்தியா
முழுவதும் மின்சார வாகனங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும்
மின்சார வாகனங்கள் இயக்கப்படும் எனவும் 2025 ஆம் ஆண்டுக்குள் 10,000 மின்சார
வாகனங்கள் இந்தியாவில் மட்டும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
.
2030-க்குள் 1 லட்சம் மின்சார
வாகனங்கள்
அதேபோல் 2030 ஆம் ஆண்டுக்குள் 1
லட்சம் மின்சார வாகனங்கள் உலகளவில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த 10,000
வாகனங்களானது 3 சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எந்தெந்த நகரங்கள் தெரியுமா?
அதேபோல் 2020 ஆம் ஆண்டில், இந்த
வாகனங்களானது இந்தியாவின் 20 க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. அது, டெல்லி என்.சி.ஆர், பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத்,
புனே, நாக்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்கள் அடங்கும் என
தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக