கடந்த 2019 ஆம் ஆண்டில் பட்ஜெட் விலையிலான ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை வழங்கிய ரியல்மி நிறுவனம் இந்த 2020 ஆம் ஆண்டில் ரெட்மி ஸ்மார்ட்போன்களை "ஒரு வழி செய்துவிட வேண்டும்" என்கிற முனைப்பில் கீழ் உள்ளது போல் தெரிகிறது.
ரியல்மி
நிறுவனம் நேற்று ஒரு நம்பமுடியாத அறிமுகத்தை நிகழ்த்தியது. ரியல்மி C2s எனும் ஒரு
சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
நம்பினால் நம்புங்கள் இந்த ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போனின் விலை (தாய்லாந்தில்)
1,290 பட் ஆகும். அதாவது இந்திய மதிப்பின் கீழ் வெறும் ரூ.3,069 ஆகும். இந்த புதிய
ரியல்மி ஸ்மார்ட்போன்ஆனது டயமண்ட் பிளாக் என்கிற ஒற்றை வண்ண விருப்பத்தின் கீழ்
மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளது.
அம்சங்களை பொறுத்தவரை, ரியல்ம் சி2எஸ் ஆனது 6.1 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி
டிஸ்ப்ளேவை 1560 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 19.5: 9 என்ற அளவிலான
திரை விகிதம் மற்றும் 80.3% அளவிலான ஸ்க்ரீன் டூ பாடி விகித்துடன் கொண்டுள்ளது.
தவிர இந்த ஸ்மார்ட்போன்
2.0Ghz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு
வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி நீட்டிப்பு ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.
கேமரா துறையைப் பொறுத்தவரை, ரியல்மி சி2எஸ் ஆனது 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவுடன் 2 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.
கேமரா துறையைப் பொறுத்தவரை, ரியல்மி சி2எஸ் ஆனது 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவுடன் 2 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.
இந்த மொத்த அமைப்பும் ஒரு
4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது, மேலும் இது கலர்ஓஎஸ் 6.0 மூலம் இயங்குகிறது
இருப்பினும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. என்னவென்றால்
இந்த ஸ்மார்ட்போனில் டைமண்ட்-கட் வடிவமைப்பு உள்ளது, மேலும் இது AI ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும்
கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 4G VoLTE, ப்ளூடூத், வைஃபை, டூயல்
சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக