Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜனவரி, 2020

சிக்கனமா இருக்காங்களாம்... ட்ராலி பேக்குக்குள் சிறுவனை கொண்டு சென்ற தம்பதி..!

மொராக்கோ நாட்டில் 10 வயது சிறுவனை ஐரோப்பா நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி தம்பதி இருவர் அச்சிறுவனை காய்கறி பேக்கில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட ஆப்பிரிக்காவின் மொராக்கா நாட்டின் முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய 10 மகனை ஐரோப்பா நாட்டிற்கு அழைத்து செல்லும்படிக்கு அங்கிருந்த தம்பதியை நாடியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அவர்கள் தாயை முகாமில் தங்கவைத்து விட்டு சிறுவனுடன் புறப்பட்டனர்.

போக்குவரத்து செலவை குறைப்பதற்காக அந்த தம்பதி, சிறுவனை காய்கறிகளை நிரப்பிய ட்ராலி பேகில் அமரவைத்துவிட்டு மேற்புறமும் சில காய்கறிகளை கொண்டு மூடியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வட ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள மெலிலா நகரத்தை கடக்கும்போது அங்கிருந்த சில அதிகாரிகள் அவர்களிடம் சோதனை செய்துள்ளனர்.

அப்போது ட்ராலி பேக் வழக்கத்துக்கு மாறாக காட்சியளித்ததால், அதை திறந்து பார்த்த அதிகாரிகள், அதற்குள் சிறுவன் முடங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அந்த தம்பதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு சிறுவனை மீட்டு முகாமில் இருந்த அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சட்ட விரோதமாகவும், அபாயகரமாகவும் சிறுவனை அழைத்து செல்ல முயற்சித்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக