டாடா
ஸ்கை நிறுவனம் இந்தியாவில் டாடா ஸ்கை Binge+ என்ற புதிய ஆண்ட்ராய்டு செட்-டாப்
பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸின் விலை வெறும்
ரூ.5,999 மட்டுமே. தற்போது டாடா ஸ்கை Binge+ 30 நாள் இலவச சோதனை சந்தாவை
வழங்குகிறது.
புதிய டாடா ஸ்கை
Binge+
புதிய
டாடா ஸ்கை Binge+ ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ், இப்போது நிறுவனத்தின்
இணையதளத்தில், டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டாடா ஸ்கை எச்டி
செட்-டாப் Binge+ ரெக்கார்டருடன் பட்டியலிடப்பட்டுள்ளது. செட்-டாப் பாக்ஸ்
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயக்கப்படுகிறது மற்றும் கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட்
தேடலுடன் செயல்படுகிறது.
ரூ.249 திட்டம்
இலவச
சோதனைக் காலத்திற்குப் பிறகு, நுகர்வோர் மாதத்திற்கு ரூ.249 செலுத்த வேண்டும்.
டாட் ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸ் சந்தாதாரர்களுக்கு ஒரு சாதனத்தில் நேரடி டிவி
மற்றும் OTT உள்ளடக்கம் இரண்டையும் பார்க்க அனுமதி வழங்குகிறது. செட்-டாப் பாக்ஸை
இணையத்துடன் இணைப்பதன் மூலம் OTT உள்ளடக்கத்தைப் பயனர்கள் பார்வையிடலாம்.
டாடா ஸ்கை நிகழ்ச்சிகளைத் தவிர,
ஸ்ட்ரீமிங் சேவை ஜீ5, ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஈரோஸ் நவ், ஹங்காமா
மற்றும் சன்நெக்ஸ்ட் பயன்பாடுகளிலிருந்து OTT உள்ளடக்கத்தை வழங்குகிறது. மேலும், டாட்
ஸ்கை Binge+, டாடா ஸ்கை விஓடி நூலகத்திலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட தலைப்பு சேவைகளைச்
சந்தாதாரர்களை வழங்குகிறது.
ஆண்ட்ராய்டு டிவி 9.0
பை
எஸ்.டி.பி
அம்சங்களுடன் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது
சமீபத்திய ஆண்ட்ராய்டு டிவி 9.0 பை இயங்குதளத்தில் இயக்குகிறது. பயனர்கள்
5000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் மற்றும் கேம்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம்
செய்யலாம். டாடா ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸ் சாதனத்தில் கூகுள் அசிஸ்டன்ட்
சேவைக்கான கூகுள் அசிஸ்டன்ட் பட்டனுடன் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக