ஜியோ ஃபைபர் அதன் வணிக சேவைகளை அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்கள்
ஆகிவிட்டன, அதன் திட்டங்கள் மலிவானவை அல்ல என்றாலும் கூட, அவை பல்வேறு விலை புள்ளிகளின்
கீழ் பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகின்றன. ஜியோ ஃபைபர் திட்டங்களுடனான பெரிய நன்மைகளில்
ஒன்று சந்தாக்களுடன் தொகுக்கப்பட்ட OTT இயங்குதளங்களின் இலவச சந்தாக்கள் ஆகும். வழக்கமான
டெலிகாம் நன்மைகளை தவிர்த்து கூடுதல் ஓடிடி தளங்களை அணுக விரும்புவோருக்கு ஜியோ ஃபைபர்
ஒரு நல்ல ஒப்பந்தமாகும். சமீபத்தில் வெளியான ஒரு ஜியோ அறிக்கையானது "இலவச ஓடிடி
சந்தா" ஆட்டத்தை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது.
பட்டியலில் ஜீ5 சந்தாவும் இணைகிறது!
வெளியான
அறிக்கையின்படி, ஜியோ ஃபைபர் சமீபத்தில் ஜீ5-ஐ அதன் மூன்றாம் தரப்பு OTT இயங்குதளங்களின்
பட்டியலில் சேர்த்ததாகக் கூறுகிறது. இந்த ஜீ5 இணைப்பிற்கு முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையானது
ஹாட்ஸ்டார், வூட், சோனிலிவ் மற்றும் ஜியோசினிமா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட OTT தளங்களை
வழங்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இப்போது ஜீ5 சந்தாவும்
இணைகிறது. இருப்பினும் ஜியோ இன்னும் அதன் பிளாட்பார்மில் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான்
ப்ரைம் வீடியோவை வழங்கவில்லை.
எந்தெந்த திட்டத்தின் கீழ்?
நீங்கள்
ரீசார்ஜ் செய்யும் திட்டங்களைப் பொறுத்து, சந்தா நன்மைகள் மாறுபடும். ஜியோ ஃபைபர் சேவையின்
கீழ் மொத்தம் மொத்தம் ஆறு திட்டங்கள் உள்ளது. அவைகளில் மாதத்திற்கு ரூ.699 மதிப்புள்ள
அடிப்படை திட்டம் மட்டுமே எந்த விதமான ஓடிடி அணுகலையம் வழங்காது, அது JioCinema மற்றும்
JioSaavn க்கு மட்டுமே அணுகலை வழங்கும், அதுவும் மூன்று முறை மட்டுமே கவச சந்தாவை வழங்கும்.
இருப்பினும், ரூ.849 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ பைபர் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள்
மேற்குறிப்பிட்ட OTT தளங்களான அணுகலைப் பெறுவார்கள், ஆனால் முதல் மூன்று முறை மட்டுமே
என்பதை நினைவில் கொள்ளவும். ரூ.1,299 மற்றும் அதற்கும் அதிகமான அனைத்து திட்டங்களுடனும்,
OTT இயங்குதளங்களுக்கான வழக்கமான சந்தா கிடைக்கும்.
இருந்தாலும் கூட ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அளவிற்கு
இல்லை!
நிறைய
ஓடிடி உள்ளடக்கங்களைப் பார்க்க விரும்புவோருக்கு இது நிச்சயமாக ஒரு நல்ல ஒப்பந்தம்
தான் என்றாலும் கூட, OTT இயங்குதளங்கள் என்று வரும்போது போட்டியாளரான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம்
ஆனது ஜியோ பைபரை விட நிறையவே வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.899 என்கிற அடிப்படை
திட்டத்தைத் தவிர, மற்ற திட்டங்கள் அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ
மற்றும் ஜீ5 ஆகியவற்றுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது.
ஏர்டெல் - எத்தனை முறை என்கிற கணக்கே இல்லை!
நெட்ஃபிக்ஸ்
சந்தாவுக்கு, சந்தாதாரர்கள் எஸ்டி ஸ்ட்ரீமிங்குடன் மூன்று மாத பேஸிக் பிளானை தேர்வு
செய்ய வேண்டும். ஏர்டெல் நிறுவனம் அமேசான் ப்ரைம் வீடியோவின் வருடாந்திர சந்தாவையும்
வழங்குகிறது. தவிர ஏர்டெல், ஜீ5-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. சிறந்த அம்சம்
என்னவென்றால், ஜியோ ஃபைபரைப் போலல்லாமல், ஏர்டெல் இந்த சந்தா சலுகைகளை தொடர்ந்து அளித்து
வருகிறது, அதாவது எத்தனை முறை வழங்கப்படுகின்றன என்பதற்கு எந்த வரம்பும் கிடையாது.
சமீபத்தில் ஏர்டெல் அதன் புதிய அன்லிமிடெட் ரூ.399 டாப்-அப் திட்டத்தைக் கொண்டு வந்தது,
இது டேட்டா லிமிட்டை 3.3TB ஆக உயர்த்துகிறது, இது நடைமுறையில் எந்தவொரு பயனருக்கும்
வரம்பற்றதாக அமைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக