இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சி ஜனவரி 3ம் வாரம் தொடங்கும்.
வேகமாக சென்று நிலவின்மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை.
சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதால் 7 ஆண்டுக்கு தகவலை அனுப்பும்.
சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக