Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜனவரி, 2020

5000mAh பேட்டரி + க்வாட் கேமரா + 6.5 இன்ச் மினி ட்ராப் ஃபுல் ஸ்க்ரீன் டிஸ்பிளே! ரூ.8,999 க்கு வேற என்ன வேணும்?

 
 
டந்த 2019 ஆம் ஆண்டில் சீனாவை சேர்ந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக உருவெடுத்த ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி5 தொடரின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வருகிற ஜனவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அது Realme 5i ஆகும். இதை உறுதி செய்யும் வண்ணம், பிரபல இகாமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் மைக்ரோசைட் ஒன்றையும் உருவாக்கியுள்ளது, ஆக ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்தியாவில் அதன் விற்பனை தொடங்கும் என்பது உறுதியாகியது. ரியல்மி 5ஐ ஆனது ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும்.

அட்டகாசமான மினி-டிராப் ஃபுல்ஸ்க்ரீன் டிஸ்பிளே!

ஃப்ளிப்கார்ட் வலைத்தளத்தின் டீஸர் ஆனது வரவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் சில அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது. அதன்படி Realem 5i ஆனது 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மற்றும் 6.5 இன்ச் அளவிலான மினி-டிராப் ஃபுல்ஸ்க்ரீன் டிஸ்பிளேவுடன் வரும். மேலும் அந்த ஃப்ளிப்கார்ட் டீஸர் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் ஆனது AI ஆதரவு கொண்ட முதன்மை கேமரா, அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட க்வாட் கேமராவைக் கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்!

ரியல்மி 5i ஆனது ‘சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்' கொண்டு இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதன் பெயரை வெளிப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் ப்ளூ கலர் வேரியண்ட்டின் கீழ் கிடைக்கும் என்பதையும் ஃப்ளிப்கார்ட் டீஸர் உறுதிப்படுத்துகிறது. இதற்கிடையில், ரியல்மி நிறுவனம் இன்று வியட்நாமில் அதன் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. சமீபத்திய கீக்பெஞ்ச் பட்டியலின்படி, ரியல்மி 5i ஆனது 1.8GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். இது 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை உடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
 
டிஸ்பிளே & கேமராக்கள்!

முன்னதாக வெளியான லீக் ஆன அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி 5i ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் அளவிலான எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இது 12 மெகாபிக்சல் அளவிலான பிரதான சென்சார் + 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட் கேமரா + 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா ஆகியவைகளை கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தவரை, ரியல்மி 5ஐ ஆனது ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கும்.

மெமரி, பேட்டரி & விலை!

ரியல்மி 5i ஆனது ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்டால் இயக்கப்படும், மேலும் இது இரண்டு சேமிப்பு விருப்பங்களைக் கொண்டிருக்கும் - 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி. இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜருடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும், மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.0.1 மூலம் இயங்கும். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரியல்மி 5i ஆனது ரூ.8,999 என்கிற புள்ளியில் இருந்து தொடங்கலாம். இதன் அதிகாரபூர்வமான விலை மற்றும் அம்சங்கள் பற்றிய அப்டேட்களுக்கு ஊர்க்கோடாங்கியை பின்தொடரவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக