Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 10 ஜனவரி, 2020

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து ஆலமரத்தில் தொங்கவிட்ட கொடூரர்கள்.!

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து ஆலமரத்தில் தொங்கவிட்ட கொடூரர்கள்.!


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 31-ம் தேதி தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அவர்களது புகாரை ஏற்காமல் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததால் அவரைத் திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் கூறினர்.

இந்நிலையில் ஜனவரி 5-ம் தேதி  அதே கிராமத்தில் இளம்பெண் ஒரு ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இளம் பெண்ணின் உடலை மருத்துவ பரிசோதனை செய்ததில்  கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது தெரியவந்தது.

பின்னர் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்‌ஷன், சதீஷ் ,பிமல் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல்  வன்கொடுமை செய்து  கொலை செய்தது தெரியவந்தது.

குற்றவாளிகள் நான்கு பேர் மீது வன்கொடுமை ,கொலை போன்ற பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக