கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல வகையில் முயற்சி எடுத்து
வருகிறது.
ஒரு புறம் இந்த நிறுவனத்தின் விஆர்எஸ்
திட்டம் இதற்காக நன்கு கைகொடுத்தது என்றே கூறலாம். மறுபுறம் இந்த திட்டத்துக்கு
தேவையான நிதி மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட 4ஜி சேவை வழங்கி வரும் நிலையில்,
அரசு பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜிக்கு சேவைக்கு
மாறவில்லை என்பது இதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதனாலேயே மற்ற தனியார் நிறுவனங்களுடம்
போட்டி போட முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் தத்தளித்து வருகிறது.
சொத்து
விற்பனை
இதனால் கடந்த சில மாதங்களாகவே அரசு
இந்த நிறுவனத்தினை மேம்படுத்தவும், சீரமைக்கும் பொருட்டும் நிதி திரட்ட முனைந்து
வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல்லின் 14 மிகப்பெரிய சொத்துக்கள் பட்டியல்
ஒன்றை தொகுத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும்
தொகையை இந்த நிறுவனத்தின் சீரமைப்பு முதலீட்டுக்காக முதலீடு செய்ய முடியும்
என்றும், இந்த நிறுவனம் சொத்து விற்பனை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
பொதுத்
சொத்து மேலாண்மையிடம் ஒப்படைப்பு
ஆக இதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட 14
சொத்துகளை தேர்தெடுத்து பொதுச்சொத்து மேலாண்மை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என
பிஎஸ்என்எல் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான பி.கே.புர்வார் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் கடன்
பிரச்சனையாலும், தொடர்ந்து கண்டு வரும் நஷ்டத்தினாலும் தத்தளித்து வருகிறது
4ஜி
அலைவரிசை
மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி அலை
வரிசை பரிசோதனை ரீதியாக அறிமுகம் செய்ய உள்ள நிலையில், நீண்ட போராட்டத்துக்கு
பிறகு தற்போது தான் அந்த நிறுவனத்துக்கு 4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. எனினும் 4 ஜி சேவை வந்தாலும் கூட இந்த நிறுவனம் மற்ற தனியார்
நிறுவனங்களுக்கு ஈடாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்தை
விற்க திட்டம்
ஆக இந்த நிறுவனம் முதலீடுகளை திரட்ட
இதன் சொத்துகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை,
திருவனந்தபுரம், ஹைதராபாத், காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள 14 சொத்துக்கள்
தேர்வு செய்யப்பட்டு, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், இவற்றின் மதிப்பு ரூ.20,160 கோடி எனவும் புர்வார்
தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி
திட்டம்
கடந்த ஆண்டு அக்டோபரில் பிஎஸ்என்எல்
மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைத்ததோடு, இந்த திட்டத்தினை மறுசீரமைக்கும்
பொருட்டு மறுமலர்ச்சிக்காக 69,000 கோடி ரூபாய் கொடுப்பதாக அரசு ஒப்புக்
கொண்டுள்ளது. இதில் இரு நிறுவனங்களையும் இணைத்தல், அவர்களின் சொத்துகளை
பணமாக்குதல், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குதல் உள்ளிட்டவை இந்த மறுமலர்ச்சி
திட்டத்தில் அடங்கும்.
சொத்துக்களை
பணமாக்கும்
அரசு மறுமலர்ச்சி திட்டத்தின் படி,
அடுத்து வரும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் இன்னும் சில சொத்துகளை விற்று
பணமாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த
2010லிருந்தே நஷ்டம் கண்டு வருவதாகவும், இதே எம்டிஎன்எல் நிறுவனமும் கடந்த 10
ஆண்டுகளாகவே நஷ்டம் கண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
கடன்
பத்திரம் மூலம் நிதி திரட்ட முடிவு
ஆக இந்த நிறுவனத்தினை மறுசீரமைக்கும்
பொருட்டு சொத்துக்களை விற்க தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அரசு. மேலும்
கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் இந்த நிறுவனம் முயற்சி செய்து வருவதாகவும்
கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் பிப்ரவரி மாதத்தில் இருந்து இது
தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக