Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜனவரி, 2020

"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…!


small-morning-rituals-that-will-energise-your-entire-day
வ்வொரு புதிய நாளும் ஒவ்வொருவருக்கும் புதிய வாய்ப்புகளைத் தருகிறது. நீங்கள் அந்த தருணங்களை கைப்பற்றி, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், உங்கள் வாழ்க்கை பாதையில் வீசும் எல்லாவற்றையும் சமாளிக்க நீங்கள் மனதளவில் தயாராக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் உங்கள் நாளை சரியான வழியில் தொடங்குவது உங்கள் இலக்கை அடைவதற்கான சிறந்த வழியாகும். காலை என்பது நாளின் மிக சக்திவாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.
உங்கள் நாளின் முதல் இரண்டு மணிநேரங்களை நீங்கள் எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பது உண்மையில் நாள் முழுவதும் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் என்று கோடிட்டுக் காட்ட உதவுகிறது. இது உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க உங்களை கவனம் செலுத்துகிறது. காலை வேளையை நீங்கள் நன்றாக தொடங்கும்போது, அந்த நாளும் உங்களுக்கு நன்றாக அமைகிறது. உங்கள் காலை பழக்கங்களில் இந்த இக்கட்டுரையில் நாங்கள் சொல்லும் சிலவற்றை நீங்கள் சேர்க்கும்போது, அன்றைய நாளை சிறந்த நாளாக நீங்கள் மாற்றலாம்.
படுக்கையை ஒழுங்கமைப்பது
படுக்கையை சரி செய்யும் நடவடிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை. ஆனால், காலையில் உங்கள் படுக்கையை ஒழுங்கமைப்பது உங்களை ஒழுங்கமைக்க உதவுகிறது. இது உங்களுக்கு ஒரு வீட்டு வேலையாகத் தோன்றலாம். ஆனால், இது ஒரு உளவியல் கோணத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் காலையில் படுக்கையை ஒழுங்கமைக்கும் போது, நீங்கள் அந்த நாளின் முதல் பணியை சரியாக முடித்துவிட்டீர்கள் என்ற மன திருப்தியைப் பெறுவீர்கள். இது நாள் முழுவதும் நன்றாக பயணம் செய்ய உங்களுக்கு உதவும். அதே நேரம் இது உங்கள் வீட்டை சுத்தமாகவும் வைத்திருக்கிறது.
தண்ணீர் குடிப்பது
தினமும் காலை தண்ணீர் குடிப்பது உங்கள் காலை சடங்கின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். நம் உடல் ஒழுங்காக செயல்பட தண்ணீர் மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். குளிர்ந்த நீர், வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை நீர் என்று எந்த நீரை அருந்த விரும்புகிறீர்களோ, அது முற்றிலும் உங்களைப் பொறுத்தது. காலையில் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். நாள் முழுக்க இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கஉதவும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது உங்கள் அன்றாட காலை பழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பைலேட்ஸ், ஸும்பா, ஜிம்மிங் அல்லது வெறுமனே நடைப்பயிற்சி என நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சியைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க மற்றும் மனநிம்மதி பெற சிறிது நேரம் தினமும் ஒதுக்குவது முக்கியம். எந்தவொரு உடல் செயல்பாடுகளையும் நீங்கள் செய்யும்போது, அது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று அறிவியல் கூறுகிறது.
செய்ய வேண்டிய பட்டியலைத் தயாரிக்கவும்
காலையில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை அட்டவணையாகத் தயார் செய்யுங்கள். அந்த குறிப்பிட்ட நாளில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களையும் அவற்றின் முன்னுரிமைகளையும் கவனியுங்கள். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் நேரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும். மேலும் எந்த முக்கியமான பணியையும் நீங்கள் இழக்க மாட்டீர்கள். நீங்கள் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் நாள் எப்படி இருக்கும் என்பதற்கான தோராயமான யோசனையை உங்களுக்குத் தருவதற்கும், உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பயன்படும்.
செல்போனை செக் செய்வதை நிறுத்துங்கள்
செல்போன்கள் உண்மையில் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளன. செல்போன் இல்லாமல் ஒரு நாளை கற்பனை செய்து பார்ப்பதுக்கூட சாத்தியமற்றது. ஆனால், நீங்கள் நாள் முழுவதும் செல்போன் திரையை உங்கள் காதலியை பார்ப்பது போன்று பார்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல. காலையில் உங்கள் செல்போனை செக் செய்ய முயற்சிக்காதீர்கள் அல்லது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு பிறகு இன்பாக்ஸைச் சரிபார்ப்பதை நிறுத்தவும். உங்களை உற்சாகப்படுத்தவும், உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் காலை நேரங்களை நீங்களே ஒதுக்குங்கள். செல்போனிடம் இருந்து சில மணிநேரம் உங்கள் கைகளை தள்ளி வைத்திருப்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.
நாளை தொடங்குவது
அடுத்தது, நாளை தொடங்குவது. இது காலை வழக்கத்தின் மற்றொரு முக்கியமான பகுதியாகும். எந்த தொந்தரவில்லாமல் ஒரு படிப்படியான செயல்முறையை தினமும் பின்பற்றவும். காலையில் எழுந்ததும் பலர் முதலில் பல்துலக்குகிறார்கள். சிலர் முதலில் தங்கள் ஆடைகளை சலவை செய்கிறார்கள், பின்னர் குளிக்கிறார்கள், மற்றவர்கள் காலை செய்தித்தாளுடன் வீட்டைச் சுற்றி உலாவிக் கொண்டிருப்பார்கள். சிலர் பெட் காபி அருந்துவார்கள். சில நேரங்களில் பலர் முதலில் என்ன செய்வார்கள், அதற்குப் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது. இப்படியில்லாமல், ஒரு வழக்கமான செயலைச் செய்யுங்கள். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களை ஒழுங்கமைக்கும்.
காலை உணவு
நீங்கள் வெறும் வயிற்றில் இந்த உலகை எதிர்த்துப் போராட முடியாது. எனவே, காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண மறந்துவிடாதீர்கள். நீங்கள் விரும்பும் உணவை சாப்பிடுங்கள். காலை உணவை நீங்கள் தவிர்க்கும்போது, அது உங்களைச் சோர்வடைச் செய்யும், சோம்பலாக உணரச் செய்யும். ஆதலால், காலை உணவை தவிர்க்காதீர்கள். காலை உணவு உங்களின் அன்றைய பணியைச் செய்வதற்கான ஆற்றலைத் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக