Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜனவரி, 2020

வெற்றி உங்கள் வசம்..

 Image result for வெற்றி உங்கள் வசம்"
வாழ்க்கை திறன் என்பது அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும், சவால்களையும் மனிதர்கள் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பையும், நேர்மறையான நடத்தைகளையும் குறிப்பதாகும்.

 நாம் நினைத்த வேலையை பெறுவதற்காக எண்ணற்ற திறன்களை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்த திறன்கள் நமது தொழில் வாழ்க்கையை மட்டுமில்லாமல் நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் வளமாக்க கூடியவை. அந்த வகையில் நாம் திறன்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாழ்வை வளமாக்கும் திறன்கள் :

 அலுவலகத்தில் இருக்கும் வேலைகளை நிர்வகிப்பது போல் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும், அவர்களது செயல்பாடுகளையும் நிர்வகிப்பதற்கு நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும்.

 நமது தொழில் தொடர்புக்கு உதவும் புத்தகங்களை மட்டும் படிப்பதோடு இல்லாமல் பொது அறிவை வளர்க்கக்கூடிய புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

 நமது எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் மொழியில் நன்றாக வாசிக்கவும் மற்றும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

 மனக்கணக்கு திறன் என்பது நமது முன்னோர்களிடம் இருந்து நாம் கற்க மறந்த பல விஷயங்களுள் ஒன்றாகும். இது நாம் பயின்ற பாடக்கணக்கிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டதாகும். எனவே இந்த திறனை வளர்த்துக் கொள்வது நமது தொழில் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும்.

 நாம் பேசும்பொழுது பயன்படுத்தும் வார்த்தைகளில் அதிக கவனம் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி நமது எண்ணங்களையும், கருத்துக்களையும் பிறரிடம் தெளிவாக வெளிப்படுத்துவதில் இந்த திறன் முக்கிய பங்காற்றுகிறது. எனவே இத்தகைய திறனை வளர்த்துக் கொள்வது மிக அவசியமாகும்.

 நமது வாழ்க்கையில் பல தோல்விகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து மீண்டு எழுவதற்கு, தன்னம்பிக்கையுடன் போராடவும் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும். இந்த செயல்முறையே வெற்றிக்கான வழியை வகுக்கும்.

 அலுவலகங்களிலும் சரி, வீட்டிலும் சரி நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். தெரிந்த நபர்களை கண்டால் புன்னகைப்பது, அலுவலகங்களில் வாடிக்கையாளருடன் முறையாக கைக் குலுக்குவது, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நன்றாக சிரித்துப் பேசி பழகுவது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்து திறன்களையும் கற்றுக்கொண்டு உங்களின் வாழ்க்கையை வளமாக்குங்கள்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக