Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

இரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்!


6 Reasons Why You Need To Stop Using Your Phone At Night
ப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். காலையில் கண் விழிக்கும் போது ஸ்க்ரோலிங் செய்யும் விரல்கள் இரவில் தூங்கப் போகும் வரை நின்ற பாடில்லை. அந்தளவுக்கு மொபைல் போன் மக்களுக்கு ஒரு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது. ஆனால் இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை நோண்டலாமா? அப்படி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு சரியா? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
இது குறித்து உடல்நல வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால் இரவில் மொபைல் போன் பயன்படுத்துவது உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது. 

மொபைல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். இது உங்கள் பார்வையை மட்டுமல்ல, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இனி மொபைலை நீங்கள் தூங்கும் அறைக்கு எடுத்துச் செல்லாதீர்கள். இரவு நேரங்களில் மொபைல் பார்ப்பதால் எந்த மாதிரியான ஆபத்துகள் உண்டாகின்றன, வாங்க பார்க்கலாம்.
தூக்க நேரத்தை பாதிக்கிறது
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து இரவு நேரங்களில் மொபைல் போன் பார்ப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் மெசேஜ், நண்பர்களுடன் சாட் செய்வது இதுபோன்ற செயல்கள் உங்கள் தூக்க நேரத்தை தள்ளிப் போட வைக்கும். இதனால் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படுவீர்கள்.
ரெட்டினா பகுதியை பாதிக்கிறது
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டது. இது கண்களில் வெகு நேரம் படும் போது கண்களில் உள்ள ரெட்டினா பகுதியை பாதிப்படையச் செய்கிறது. அமெரிக்க மாகுலர் டிஜெனரேஷன் அசோசியேஷனின் கூற்றுப்படி, மொபைல் போனிலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளி விழித்திரைக்கு சேதத்தை ஏற்படுத்தி மாக்குலார் சிதைவை உண்டாக்கி பார்வை குறைபாட்டை உண்டு பண்ணுகிறது.
மன அழுத்தத்தை அதிகரித்தல்
தூங்க வேண்டிய சமயத்தில் தூங்காமல் மொபைலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்கிறது. இந்த நீல நிற ஒளிகள் தூக்கமின்மை பிரச்சனை, கண் பார்வை குறைபாடு இவற்றை ஏற்படுத்தும் போது தானாகவே நீங்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறீர்கள். போதிய தூக்கம் இல்லாததால் பகல் நேரங்களில் சோர்வு, தலைவலி, மனக்குழப்பம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மன ரீதியாக பலவீனமும் அடைகிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புற்றுநோய் அபாயம்
சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடைய மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதால், செல்போன்கள் மனிதர்களுக்கு புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. செல்போன் நீல நிற ஒளியை வெகு நேரம் பார்ப்பது மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
நினைவாற்றலில் தடுமாற்றம்
இந்த செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுகள் மூளையை பாதிக்கின்றன. இரவில் சரிவர தூங்காமல் இருப்பது உங்கள் மூளை செயல்பாட்டை குறைக்கும், பகல் நேரங்களில் தெளிவாக சிந்திக்க முடியாது. நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் தடுமாறும்.
கண்களுக்கு சோர்வு
இருட்டான அறையில் அல்லது இருட்டான சுற்றுப் புறங்களில் மொபைல் போனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் நீல நிற ஒளி உங்கள் கண்களுக்கு வலியையும் சோர்வையும் கொடுக்கிறது. இதுவே நீங்கள் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் சீக்கிரமே கண் பார்வையில் நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள் மருத்துவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!