>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 3 ஜனவரி, 2020

    புறாக்கள்..!

     Image result for புறாக்கள்
    ரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும், சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி எதிரும் புதிருமாக வாழ்ந்து வந்தன. அந்த சமயம் கோபுரத்தில் கும்பாபிஷேக வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இதுநாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறா கூட்டமும் இப்போது ஒன்றுகூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

    செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன. தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை யுகித்தான்.

    நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை தயார் செய்து விரித்து வைத்தான். அடுத்தநாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

    சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்துக்கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதை பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன. உடனே வேடன், ஐய்யய்யோ..! புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே..! என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

    பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, 'எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்" என்று கூறின. உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது என்று கூறிக்கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

    இந்த புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்த வேடன் அவைகள் மரக்கிளையில் சிக்கியதும் மகிழ்ந்தான். நல்லவேளையாக ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்ற நெறிப்படி இந்த புறாக்கள் என்னிடம் சிக்கிக்கொண்டது என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான். புறாக்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து பறந்திருந்தால் வேடனிடம் இருந்து தப்பி பிழைத்திருக்கலாம். ஆனால் அவைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டதால் வேடனிடம் மாட்டிக் கொண்டது.

    நீதி:

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் உண்டாகும். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக