"ஒருவாரமா சளி பிடிச்சிகிட்டு ஒரே தொந்தரவா இருக்குப்பானு"
நிறைய பேர் சொல்லி நாம கேள்விபட்டு இருப்போம். இவ்வளவு ஏன் நாமகூட பல தடவை இதுமாறி
மத்தவங்கிட்ட சொல்லிருப்போம். குளிர்காலம் வந்துட்டா போதும் எல்லாருக்கும் சளி,
இரும்பல், காய்ச்சல் போன்றவை போர்வை போல உங்கள் கூடவே இருக்கும். "சளி
பிடிச்சிருக்கா மா... மருந்து சாப்பிட்டா ஏழு நாளுல குணாமாகும், மருந்து
சாப்பிடலனா ஒரே வாரத்தில் குணமாகும்" என்று சூப்பர் ஸ்டார் ரஜினி சந்திரமுகி
படத்தில் கூறியிருப்பார்.
சளி மிகவும் தொந்தரவாக இருக்கும்.
ஆனால், இதற்கு மருந்துகள் எப்போதும் உதவாது. அவை செய்தாலும், விளைவுகள் நீண்ட
காலம் நீடிக்காது. சரி அப்ப நாங்க என்னாதான் பண்ணும்னு நீங்க கேட்குறீங்க.
அத்தியாவசிய எண்ணெய்கள் இந்த பிரச்சனைக்குக் கைகொடுக்கும். இதை ஆய்வு மூலமாகவும் நிரூபணம்
செய்து இருக்கிறார்கள். அத்தியாவசிய எண்ணெய்கள் அளிக்கும் நன்மைகளை பற்றி இங்க
பார்க்கலாம்.
அத்தியாவசிய எண்ணெய்களும் குளிரும்
வைரஸ் மற்றும் பாக்டீரியா
தொற்றுகளுக்கு எதிராக போராடுகின்றன அத்தியாவசிய எண்ணெய்கள். ஒரு ஆய்வில்,
அத்தியாவசிய எண்ணெய் கலவை இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் செயல்பாட்டை திறம்பட
அழித்துள்ளது. அத்தியாவசிய எண்ணெய்களில் அவை எடுக்கப்பட்ட தாவரங்களிலிருந்து வரும்
தனித்துவமான நன்மைகள் நிறைய உள்ளன. இதன் காரணமாக, பண்டைய காலங்களிலிருந்து
மருத்துவ மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆராய்ச்சி கூறுவது
அத்தியாவசிய எண்ணெய்களில் குறிப்பாக
லாவெண்டர் மற்றும் புதினா ஆகியவை குளிர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும், வாய்வழி நோய்க்கிருமிகளுக்கு எதிராக
ஆண்டிசெப்டிக் தீர்வுகளையும் அத்தியாவசிய எண்ணெய்கள் வழங்குகின்றன. புதினா
எண்ணெயில் மென்தோல்(menthol) உள்ளது. இது இயற்கையான டிகோங்கஸ்டெண்டாக
செயல்படுகிறது. புதினா எண்ணெய் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைச் செய்கிறது என்கிறது
ஆய்வு முடிவுகள். குளிர்காலத்தில் அத்தியாவசிய எண்ணெயின் பயன்கள் குறித்து
இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
யூகலிப்டஸ் எண்ணெய்
மூக்கடைப்பு மற்றும் தலைவலிக்கு
யூகலிப்டஸ் எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது. யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டிவைரல்
மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் குளிர் மற்றும் பிற சுவாச நோய்களில் இருந்து
காத்து நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இது அழற்சி எதிர்ப்பு மற்றும்
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. யூகலிப்டஸ் எண்ணெய் இன்ஃப்ளூயன்ஸா
வைரஸ் தொற்றுக்கு சிகிக்சை அளிக்க
பயன்படுத்தப்படுகிறது.
புதினா எண்ணெய்
யூகலிப்டஸ் மற்றும் புதினா எண்ணெய்களின்
கலவை சைனஸ் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது பல ஆய்வு முடிவுகள்
தெரிவிக்கின்றன . புதினா தேநீர் உடலுக்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. சளி
மற்றும் காய்ச்சலைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், புதினா எண்ணெய் ஆற்றலை
அதிகரிக்கும் பண்பை பெற்றிருக்கிறது.
பிராங்கிசென்ஸ் எண்ணெய்
பிராங்கிசென்ஸ் என்பது தமிழில்
குங்கிலியம் என்று அழைக்கப்படுகிறது. பிராங்கிசென்ஸ் எண்ணெயில் பாக்டீரியா
எதிர்ப்பு, வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், குளிர்
மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இது பிடிவாதமான இருமல் மற்றும் பிற
சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
கற்பூரவள்ளி எண்ணெய்
கற்பூரவள்ளி எண்ணெய் வலுவான
ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்க
உதவும். கற்பூரவள்ளி செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்துவதால்
நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். சூடோமோனாஸ் ஏருகினோசா என்பது ஒரு
பாக்டீரியா வகையாகும். இது மனிதர்கள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு நோயை
ஏற்படுத்தும். கற்பூரவள்ளி எண்ணெய் சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும் சில
நோய்க்கிருமி பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை எண்ணெய்
இலவங்கப்பட்டை உட்பட அத்தியாவசிய
எண்ணெய்களின் கலவையானது நோய் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் மூலக்கூறுகளை 90%
குறைக்கக்கூடும் என்று 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவங்கப்பட்டை ஒரு தீவிர வெப்பமயமாதல் பண்பை
கொண்டிருக்கிறது. இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது கூட உங்கள் உடலுக்கு
வெப்பமயமாதல் விளைவைக் கொடுக்கும்.
தேயிலை மர எண்ணெய்
அரைக்கப்பட்ட தேயிலை மர இலைகளை
உள்ளிழுப்பது பெரும்பாலும் இருமல் மற்றும் சளி நோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு முறையாக
காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. தேயிலை மர எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு,
பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் தடுப்பு பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வு
முடிவுகள் காட்டுகின்றன.
எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை எண்ணெய் சக்திவாய்ந்த
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு
சிகிச்சையளிக்க உதவுகிறது. அத்தியாவசிய எண்ணெய் ஒரு இயற்கை அழுத்த நிவாரணியாகும்.
மேலும் குளிர்ச்சியின் தீவிர அறிகுறிகளுடன் தொடர்புடைய மன அழுத்தத்திலிருந்து விடுபட
உதவும்.
லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் பொதுவாக
பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும். இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற
பாதுகாப்பை வழங்குகிறது. நோயை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது. இந்த
ஃப்ரீ ரேடிக்கல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும். இந்த எண்ணெய்
நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் குளிர் காய்ச்சலை போக்க உதவுகிறது.
தைம் எண்ணெய்
தைம் என்பது மருத்துவ குணம் நிறைந்த
ஒரு மூலிகை செடி. தைம் எண்ணெய் ஒரு டானிக் தூண்டுதலாக செயல்படுகிறது. சுவாச
நோய்த்தொற்றுகள், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குமாய் அழற்சி ஆகியவற்றிற்கு
சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக தைம் இருக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு
பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணெய்கள் குளிர் மற்றும் காய்ச்சல்
அறிகுறிகளை போக்கவல்லது.
ஆரோக்கியமான வாழ்க்கை
அத்தியாவசிய எண்ணெய்களை
பயன்படுத்தினால், இனி குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய் குறித்து நீங்கள் பயம்
கொள்ளத் தேவையில்லை. உங்கள் அத்தியாவசிய எண்ணெய்களை உங்கள் அலமாரிகளில்
வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவம் குணம் கொண்ட எண்ணெய்கள் உங்கள் ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு உறுதியளிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக