Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 ஜனவரி, 2020

அப்பளம் தயாரிக்கும் முறைகள் !!

Image result for அப்பளம் தயாரிக்கும் முறைகள் !!"ப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்றாகும்.

அதற்கு காரணம் அதன் மொருமொரு தன்மைதான். இதனை தயார் செய்ய அதிக அளவில் முதலீடும் தேவைப்படாது, வீட்டிலேயே சிறிய அளவில் தொடங்கி அதன் மூலமும் நல்ல லாபமும் பெறலாம்.

அந்தவகையில் அப்பளம் தயாரிப்பது எப்படி? என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி - 1 கிலோ

எலுமிச்சை பழம் - 1

பெருங்காயம் - சிறிதளவு

எள் - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

 முதலில் அரிசியை தண்ணீரில் நன்கு அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நீரை வடிய வைத்து அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் அரிசியை வாணலியில் போட்டு வறுத்து கொண்டு, பின்பு ஆறியவுடன் மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.

 மேலும் நீரில் தேவையான அளவு உப்பையும், பெருங்காயத்தையும் எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

 கரைத்த நீருடன் எள் மற்றும் அரைத்து வைத்த மாவையும் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

 உருட்டிய மாவை உரலில் போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து இடித்துக் கொள்ளவேண்டும்.

 இடித்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, அரிசிமாவில் தேய்த்து கொள்ள வேண்டும். பிறகு அப்பளக் கட்டையினால் வட்ட வடிவமான அப்பளமாக செய்து கொள்ள வேண்டும்.

 பின்னர் சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களை காயவிட வேண்டும்.

விற்பனை செய்யும் முறைகள் :

காயவைத்த அப்பளத்தை தேவையான அளவுகளில் பாக்கெட் செய்து நம் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கும் விற்பனை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக