பண்டைய காலத்தில் ஒரு அரசரின் பெயரைக் கேட்டால்
உலகமே நடுங்கும், அவரின் படைகள் சென்ற இடத்தில் எல்லாம் வெற்றிக்கொடியை
நாட்டியதுடன் சர்வ நாசத்தையும் ஏற்படுத்தியது. அவர்தான் கிரேக்கத்தின்
மார்ஸிடோனியாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் ஆவார்.
இவர் இந்தியாவை ஆட்சி செய்யாத
போதும் இவரின் பெயரை அனைத்து இந்தியரும் அறிவார்கள். அதற்கு காரணம் உலக வரலாற்றில்
இவர் ஏற்படுத்தி இருக்கும் வலிமையான இவரின் கால்தடம்தான். உலகம் முழுவதையும் ஆள நினைத்த
அலெக்ஸாண்டரின் பார்வை இந்தியாவின் மீது விழுந்த போது அவரை தடுத்து போரிட்ட இந்திய
மன்னரை பற்றி நம்மில் பலரும் அறியாமல் இருப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த பதிவில்
அலெக்ஸாண்டரை கலங்கடித்த அந்த இந்திய மன்னர் யார் என்று பார்க்கலாம்.
அலெக்ஸாண்டர்
மூன்றாம் அலெக்சாண்டர் மிகப் பெரிய
போர்வீரன் மற்றும் உலகின் மிகப்பெரிய அரசன் என்பதில் துளியும் சந்தேகமில்லை,
பண்டைய காலத்தில் இவரின் இராஜ்ஜியம்தான் உலகிலேயே மிகப்பெரியதாக இருந்தது. இவரின்
போர்க்கலைகள் மற்றும் போர்தந்திரங்கள் இன்றும் அனைவராலும் பாராட்டப்படுவதாக
உள்ளது.
இந்தியா
மீது படையெடுப்பு
தனது இராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தபோது
இவர் இந்தியா மீது படையெடுத்து சிந்து நதியைத் தாண்டியும் தனது இராஜ்ஜியத்தை நிறுவ
விரும்பினார். அலெக்ஸாண்டர் தனது படையுடன் சிந்து பள்ளத்தாக்கை அடைந்த போது அவர்
போரஸ் என்ற துணிச்சலான மன்னரால் தடுக்கப்பட்டார். போரில் போரஸ்
தோற்கடிக்கப்பட்டார், ஆனால் அலெக்சாண்டரின் இதயத்தை தனது வீரத்தால் வென்றார்.
போரஸுடன்
போர்
கிமு 326 இல் நடந்த ஹைடாஸ்பெஸ் போரில்,
பஞ்சாபில் ஒரு பிராந்தியத்தை ஆண்ட மன்னர் போரஸுக்கு எதிராக அலெக்ஸாண்டர் சிந்து
பள்ளத்தாக்கை தாண்டி வந்து போரில் ஈடுபட்டார். போரஸுக்கும், அலெக்ஸாண்டருக்கும்
இடையே நடைபெற்ற இந்த ஹைடாஸ்பெஸ் நதி போர் அலெக்ஸாண்டரின் வரலாற்றில் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்த போர் நடந்த இடம் பஞ்சாபில்
இருந்த மோங் ஆகும், இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது.
முக்கியமான
போர்
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி,
ஹைடாஸ்பெஸ் நதிப் போர் பல வரலாற்றாசிரியர்களால் அலெக்ஸாண்டரின் விலை உயர்ந்த போராக
கருதப்படுகிறது. அலெக்சாண்டர் அதுவரை எதிர்கொண்ட எதிரிகளில் வலிமைமிக்கவராக போரஸ்
மன்னர் கருதப்படுகிறார். அவர் தனது திறமைகள், வீரம் மற்றும் துணிச்சலால்
அலெக்ஸாண்டரை ஈர்த்தார் என்பதில் சந்தேகமில்லை.
போர்
மார்ஸிடோனிய இராணுவத்தை மழுங்கடித்தது
மன்னர் போரஸின் இராணுவத்துடன் ஈடுபட்ட
பின்னர் மாசிடோனிய இராணுவம் முன்னோக்கி செல்ல மறுத்துவிட்டது என்பது அனைவரும்
அறிந்திருந்தார்கள். இந்த போர் மிகவும் கடினமானதாக இருந்தது, இதனால்
அலெக்ஸாண்டரின் படைவீரர்கள் உற்சாகத்தை இழந்தனர். இதன் விளைவாக அவரின் இராணுவம்
கிளர்ந்தெழுந்து அலெக்ஸாண்டரை தங்கள் தாயகத்திற்குத் திரும்பச் சொன்னது.
கலாச்சாரத்தை
பாதித்தது
கிரேக்க அரசியல் மற்றும் கலாச்சார
தாக்கங்கள் இந்தியாவில் நுழைவதற்கு இந்த போர் காரணமாக இருந்தது. இந்த கலாச்சார
தாக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
போரின்
நோக்கம்
கிழக்கு நோக்கி அணிவகுத்துச்செல்ல
அலெக்ஸாண்டர் போரஸை அடக்க வேண்டியிருந்தது. இத்தகைய வலுவான எதிரியை தனது அருகில்
வைத்திருப்பது தனது படைக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் நன்கு
அறிந்திருந்தார். ஏற்கனவே அடங்கியிருக்கும் இளவரசர்கள் போரஸால் மீண்டும்
கிளர்ச்சியை ஏற்படுத்து இது வழிவகுக்கும் என்று அலெக்ஸாண்டர் உணர்ந்தார். போரஸ்
தனது ராஜ்யத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது மற்றும் அலெக்ஸாண்டரின் முன்னேற்றத்தை
தடுக்க சரியான இடத்தை தேர்வு செய்தார். போரஸ் போரில் தொற்றலாம் அலெக்ஸாண்டரின்
முக்கியமான எதிரியாக இவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
யார்
போரஸ்?
போரஸ் மன்னர் பவுரவ இராஜ்ஜியத்தின்
அரசராக இருந்தார், இந்த இராஜ்ஜியம் ஜீலம் மற்றும் செனாப் நதிகளுக்கு இடையே
அமைந்திருந்த ஒரு பழங்கால இராஜ்ஜியமாகும். இது தற்போதைய பாகிஸ்தான்
கட்டுப்பாட்டில் இருக்கும் பஞ்சாபில் உள்ளது. இவரைப் பற்றிய பல வரலாற்று
குறிப்புகள் தொலைந்துவிட்டது. ஆனால் போரஸ் மட்டும் இல்லையெனில் அலேக்ஸாண்டர்
இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பார் என்பது மட்டும் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக