Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 4 ஜனவரி, 2020

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி




குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூரில் தனியார் விடுதியில் இருந்த நெல்லை கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி நெல்லை கண்ணன் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனவே நெல்லை கண்ணன் சார்பாக நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!