Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

திருப்பதியில் கொடூரம்.! பெண் கொடுக்காததால் அத்தையை வீட்டோடு வைத்து கொளுத்திய நபர்...

திருப்பதியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காத அத்தை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் 2 பேர் பலி, நான்கு பேர் கவலைக்கிடம்.

திருப்பதி கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியம் மண்டலம், துல்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ். இவர் அதே பகுதியில் உள்ள தனது அத்தை சத்தியவதி மகளை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாஸ் தனது காதல் விவகாரத்தை அத்தை சத்யவதி்யிடன் தெரிவித்து திருமணத்திற்கு பெண் கேட்டார்.

ஆனால் சீனிவாஸ் நடவடிக்கையில் விருப்பமில்லாத சத்தியவதி குடும்பத்தினர் தனது மகளுக்கு வேறு ஒருவருடன் மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தனர். இதனால் தனது அத்தை குடும்பம் மீது கோபம் கொண்ட சீனிவாஸ் அவர்களை பழித்தீர்க்க வேண்டும் என திட்டம் தீட்டினார்.
இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சீனிவாஸ் சத்தியவதி வீட்டிற்கு வந்து தகறாறு செய்தார். அப்போது காயமடைந்த சத்தியவதி ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று போலீசில் தகறாறு பற்றி புகார் அளித்தார்.
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி துல்லா கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில்சீனிவாஸ் பெட்ரோல் வாங்கி கொண்டு சத்யவதி வீட்டிற்கு வந்தார். அங்கு அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி வீட்டின் கதவுகளை மூடி விட்டார்.

இதையடுத்து அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் தீப்பற்றிக் கொண்டால் அனைவரும் சத்தம் போட்டனர். அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைப்பதற்குள் சத்தியவதியின் மகன் ராமு 18, அக்கா மகள் விஜயலட்சுமி 5 ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 மேலும் சத்தியவதி அவரது அக்காள் துர்கா பவானி,அக்காள் மகள்கள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை ராஜமகேந்திரவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சத்தியவதி, துர்கா பவானி ஆகியோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சீனிவாசை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக