Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

வோடஃபோன் ’எம்-பேசா’ இனி செயல்படாது!

மொபைல் பரிவர்த்தனை செயலியான எம்-பேசா அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மொபைல் செயலிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. பேடிஎம், ஏர்டெல் பேமெண்ட் பேங்க், கூகுள் பே, போன் பே போன்ற பல மொபைல் செயலிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வோடஃபோன் நிறுவனத்தின் எம் பேசா என்ற பரிவர்த்தனைச் செயலி 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஏர்டெல் பேமெண்ட் பேங்க், இந்தியா போஸ்ட் உள்ளிட்ட 11 நிறுவனங்களுடன் சேர்த்து வோடஃபோன் எம் பேசாவுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருந்தது. இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஐடியா நெட்வொர்க்கும் வோடஃபோன் நெட்வொர்க்கும் சென்ற ஆண்டில் ஒன்றாக இணைந்தன. இதைத் தொடர்ந்து ஐடியா பேமெண்ட் செயலியையும், வோடஃபோன் எம் பேசா பேமெண்ட் செயலியையும் ஒன்றாக இணைக்க முடிவுசெய்யப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.
 
சென்ற ஆண்டின் ஜூலை மாதத்தில் ஐடியா பேமெண்ட் செயலி நிறுத்தப்பட்ட நிலையில், எம் பேசாவின் சேவையும் நிறுத்தப்பட்டது. எம் பேசாவின் உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் வோடஃபோன் தானாக முன்வந்து ஒப்படைத்தது. இந்நிலையில், வோடஃபோன் எம் பேசா செயலியின் உரிமம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. மேலும், வோடஃபோன் எம் பேசாவில் பணம் பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் வணிகர்களும் அதைத் திரும்பப் பெற 2022 செப்டம்பர் 30 வரையில் கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வோடஃபோன் எம் பேசா செயலியில் வோடஃபோன் மொபைல் கட்டணத்தைச் செலுத்தும் வசதியைத் தவிர மற்ற பரிவர்த்தனைகள் செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக