Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

'விபச்சாரம் சட்டவிரோதம் இல்லை'... தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்..!

 

சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதம் இல்லை. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என திருச்சியில் பாலியல் தொழிலாளர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பாலியல் தொழில் என்பது சட்ட விரோதமாக கருத்தபட்டு வருகிறது. இருப்பினும் தங்களது சுய விருப்பத்துடன் அத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவதூறாகவும் நடத்தப்டுகிறார்கள் என்பதான குற்றசாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையில் திருச்சியில் பாலியல் தொழிலாளிகள் தங்களது கோரிக்கைகளை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய எய்ட்ஸ் செயல்பாட்டு திட்ட அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜனனி செய்தியாளர்களிடம் கூறியபோது, "இந்தியாவில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் பாலியல் தொழில் சட்ட விரோதமானது என்றும், ஒழுங்கற்ற செயல் என்றும் கருதுகின்றனர்.

இந்தியாவில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது அல்ல. இந்தியாவில், 10 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மறைவாக பாலியல் தொழில் செய்கின்றனர்.

பெரும்பாலானோர் சுய விருப்பத்துடன் தான் இதில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு வேலை, கட்டட வேலை, கூலி வேலைகளில் ஏற்பட்ட துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் வன்முறை காரணமாகவே நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் தொழிலில் நுழைகின்றனர்.

பணியிடத்தில் பாதுகாப்பின்மை மற்றும் நிறைவான வருமானம் இல்லாததே பாலியல் தொழிலுக்கான முக்கிய காரணிகள். இந்திய அரசியல் சாசனத்தின், 21ம் விதிப்படி, உச்சநீதிமன்றம் பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமையை நிலை நாட்டுகிறது.

எனவே பாலியல் தொழிலாளர் மீதான வன்முறை, பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும். சோதனையின் போது பிடிபட்ட பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடக் கூடாது. சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வோரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யக்கூடாது" என வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக