Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 ஜனவரி, 2020

நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் ! நீதிமன்றத்தில் புதிய மனு

#BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்  ! நீதிமன்றத்தில் புதிய மனு



டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.
எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை   குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் .இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிர்பயா வழக்கு : குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி  டெல்லி  நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்  ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,4 பேரில் சிலரின் சட்ட நடைமுறைகள் இன்னும் முடிவடையாததால் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!