Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

இரான் அறிவிப்பு: "அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளை இனி ஏற்று நடக்கப் போவதில்லை"- என்ன நடக்கும்?

bbc


ணு ஒப்பந்தம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப் போவதில்லை என இரான் அறிவித்துள்ளது.

அணு ஒப்பந்தம் 

 P5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை 2015ல் இரான் ஏற்றுக்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்குப் பதில் இரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறைத்துக்கொள்ளப் போவதில்லை
 
இரான் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், யுரேனிய செறிவூட்டல் திறனை தாங்கள் குறைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி உள்ளது.

தெஹ்ரானின் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப்பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இரான் அரசு.

இரானின் சக்திமிக்க புரட்சிகர காவல் படையின் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ இராக்கின் பாக்தாத் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார்.

இது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளது இரான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக