Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை.! இளம்பெண் பிரதமரின் அதிரடி புதிய திட்டம்.!

இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை.! இளம்பெண் பிரதமரின் அதிரடி புதிய திட்டம்.!




ரு தொழில்துறையில் வேலை புரியும் பணியாளர்களுக்கு குறைந்தது  ஒரு வாரத்தின் 5 நாட்கள், இல்ல கூடுதலாக 6 நாட்கள் பணியிருக்கும். சில துறையில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடைபெறும். இதனால் பணியாளர்கள் சோர்ந்தும் காணப்படுவார்கள். மேலும் அவரவர் சொந்த வேலைகளை பார்க்க முடியாதளவு கூட ஏற்படும். அந்த வகையில் ஒரு நாட்டில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றார். அந்நாட்டில் உள்ள பல கட்சி கூட்டணி ஆட்சியில் பிரதமராகியுள்ள இவர், தற்போது உலகின் மிக இளம் வயது பெண் தலைவர் என கூறப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை பற்றி கூறும்போது, வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும். மற்றும் பொழுதுபோக்கு, கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும், என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். பின்லாந்தில் நடைபெற்று வந்த தொழிலாளர் போராட்டத்தைத் தொடர்ந்து வேலை நாட்களைக் குறைக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். சம்பள உயர்வு, மேம்பட்ட பணி முதலியவற்றுக்கு உத்தரவாதம் அளித்ததால் பல மாதங்களாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
20-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களைக் கருத்தில்கொண்டு படிப்படியாக வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் 8 மணிநேர வேலையும் பரவலானது. பின்னர் வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வீதம் ஐந்து நாட்கள் வேலை என்பதே பொதுவான நடைமுறையில் இருந்தது என குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக