Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 9 ஜனவரி, 2020

பழிக்கு பழி .! அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்-அயதுல்லா அலி .!

பழிக்கு பழி .! அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்-அயதுல்லா அலி .!


ராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.
அமெரிக்கவின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படும் சூழல் உள்ளது.இராணுவ தளபதி காசிம் சுலைமானி இறப்பு ஈரானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து அமெரிக்காவை  கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாக கூறியது.அதற்கு டிராம்ப் அப்படித் தாக்கப்பட்டால் பின்னர் எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும் எனவும் , ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்”என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
இந்நிலையில் காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் இறுதி ஊர்வலத்தில் ஈரான் கொடியையும் ,காசிம் சுலைமானி புகைப்படம் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்களையும் பொதுமக்கள் வசித்தபடி சென்றனர்.இறுதி ஊர்வலத்தில் பேசிய மூத்த தலைவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதை அடுத்து ஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது  10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி  தாக்குதல் நடத்தியது.தாக்குதல்களில் குறைந்தது 80 அமெரிக்க வீரர்கள் இறந்து உள்ளதாக தகவல் வெளியானது . இந்த தாக்குதல் குறித்து அறிக்கை இன்று வெளியிடுவதாக நேற்று கூறினார்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் ஃபத்தே 110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தாகவும் ,இந்த ஏவுகணைகள் 186 கி.மீ இருந்து  300 கி.மீ. வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது. இந்த தாக்குதலுக்கு ‘”தியாகி சுலைமானி “என பெயரிடப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கூறிய ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனி ,  தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக