
சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள்
என்பவருக்கு, மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் பல ஆண்டுகளாக, வேளைக்கு
செல்லாமல், தன்னை சிவன் அருள்பெற்ற சித்தர் என கூறிக் கொண்டு வந்துள்ளார்.
மதுப்பழக்கத்திற்கு
அடிமையான அருள் தியானம் செய்வதாகக் கூறிக் கொண்டு, நாமக்கல் மாவட்டம்
கொல்லிமலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கணவனின் இந்த நடவடிக்கையால், அவரை
நம்பி புரோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த அவரது மனைவி, வேலைக்குச் சென்று
குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
அருள்
அதிக ஆயுளை பெற வேண்டும் என்பதற்காக, பெற்ற மகளுக்கு செய்த பெரும் கொடுமை
வெளிவந்தது. அதாவது, ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு, குழந்தைகள் அவசர
உதவி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர், 16 வயது சிறுமியை, அவரது தந்தையே
பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,
போலீசார் அருள் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்த புகாரில் உண்மை
இருப்பது தெரியவந்தது. விசாரணைக்காக, அருளை போலீசார் தேடியபோது, அவர் நாமக்கல்
மாவட்டம் கொல்லிமலைக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதையடுத்து
அவரது மனைவியை விட்டு, மகளுக்கு உடல்நிலை சரியில்லை என பேச வைத்துள்ளனர். பின்னர்
இதை கேட்டதும் அருள் கொல்லிமலையிலிருந்து வந்துள்ளார். வீட்டில் காத்திருந்த
போலீசார் அவரை மடக்கிப்பிடித்து, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை
நடத்தினர். அப்போதுதான், ஆன்மீகம் என்ற பெயரில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை
செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்
விசாரணையில், மகளுடன் பாலியல் உறவு வைத்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என,
தியானத்திற்குப் போன இடத்தில் யாரோ கூறியுள்ளனர். எனவே, மனைவி, வேலைக்குச் சென்ற
நேரத்தில், மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த
கேவலமான கொடுமையை அவர் 4 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். பின்னர் போக்சோ சட்டத்தின்
கீழ் வழக்குப்பதிவு செய்து, அருளை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு,
பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக