Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

கொரோனா வைரஸ் எதிரொலி.! சீன மக்களுக்கு உணவு கிடையாது... இலங்கை ஹோட்டல் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீன நாட்டவர்களுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பில் உள்ள ஓட்டல் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 170க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 7000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளா மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சீனாவின் யுஹானாவில் இருந்து வரும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மருத்துவ சோதனை நடத்தப்பட்ட பின்னரே அந்தந்த நாடுகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சோதனையில் அதிகபட்ச காய்ச்சல் இருப்பவர்கள் மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்படுகிறார்கள். இலங்கையிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனால் சீன நாட்டவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொழும்பில் உள்ள ஓட்டல் ஒன்று சீனர்களுக்கு புதுக்கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, சீன நாட்டவர்களுக்கு இங்கு உணவு வழங்கப்படாது என்கிற அறிவித்தல் பலகை அந்த ஓட்டல் நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் தனது கொடூர முகத்தை காட்டி வரும் இந்த வைரஸ் கேரளாவை அச்சுறுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு மக்களுக்கும் லேசான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, தமிழகத்தில் கொரானா வைரஸ் உள்ளிட்ட எந்த நோயையும் எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த சூழலில் யாரும் சீனாவுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக