Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜனவரி, 2020

சில நேரங்களில் அலையாக... சில நேரங்களில் கரையாக... ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிப்பதற்கான நேரம் இது...!!

வாடிக்கையாளர் : என்னப்பா இது... சிக்கன் பிரியாணியா? இல்ல மட்டன் பிரியாணியா?... பாரு, இதுல ஏதோ கொம்பு மாதிரி கிடக்குது...?
சர்வர் : காமெடி பண்ணாதீங்க சார்... நாய்க்கு எங்கயாவது கொம்பு இருந்து பாத்திருக்கீங்களா...
வாடிக்கையாளர் : 😳😳
----------------------------------------------------------------------------------------------
சீலா : அவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டுச்சு?
ராணி : நீதானடி சொன்ன... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு. அதான் போட்டுட்டேன்.
சீலா : 😂😂
----------------------------------------------------------------------------------------------
இன்றைய தத்துவம் !!

ஒரே அடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான்
உலகில் பல பெருந்துயரத்திற்கு காரணமாய் இருக்கிறது.
வாழ்க்கையை ஏமாற்ற முடியாது.
வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
தோல்வி குற்றமாகாது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும்.
தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன் என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்.
----------------------------------------------------------------------------------------------

சிந்திக்க...!!
ஒரு நாள் குருவும் அவரது சீடர்களும் கடலோரம், அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்...

அப்போது முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார். உனக்கு என்ன தெரிகிறது? என்று. அதற்கு முதலாவது சீடன் திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளில் அதன் விடாமுயற்சி தெரிகிறது என்று கூறினான்.

குரு அடுத்த சீடனை பார்த்து அதே கேள்வியை திரும்பக் கேட்டார்...

அதற்கு இரண்டாவது சீடன் கூறினான் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும் என்று.

குரு, அச்சீடர்கள் இருவரையும் பாரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களிடம், துன்பங்கள் வரும் சமயங்களில் சில நேரங்களில் அலைகளாய் இரு... சில நேரங்களில் கரையாய் இரு என்று கூறினார்.
----------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையின் வகைகள்!!
வாழ்க்கை ஓர் அழகு அதிசயிப்போம்...
வாழ்க்கை ஓர் இலக்கு, எட்டிடுவோம்...
வாழ்க்கை ஓர் ரகசியம், வெளிப்படுத்துவோம்...
வாழ்க்கை ஓர் விளையாட்டு, விளையாடுவோம்...
வாழ்க்கை ஓர் வாய்ப்பு, பயன்படுத்துவோம்...
வாழ்க்கை ஓர் வெகுமதி, அதை ஏற்போம்...
வாழ்க்கை ஓர் சவால், சந்திப்போம்...
வாழ்க்கை ஓர் சாகசம், துணிந்து நிற்போம்...
வாழ்க்கை ஓர் சோகம், எதிர்கொள்வோம்...
வாழ்க்கை ஓர் கடமை, செய்து முடிப்போம்...
வாழ்க்கை ஓர் பயணம், நிறைவு செய்வோம்...
வாழ்க்கை ஓர் அன்பு, அனுபவிப்போம்...
வாழ்க்கை ஓர் போராட்டம், போராடுவோம்...
----------------------------------------------------------------------------------------------
பழமொழி பழசும்... புதுசும்...!!

பழசு : இளங்கன்று பயமறியாது...
புதுசு : புது பேட்டரி சார்ஜ் இறங்காது...
பழசு : குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு...
புதுசு : கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக