பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு மற்றும்
கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் வாக்கு
எண்ணிக்கை காரணமாக ஜனவரி இரண்டு மற்றும் மூன்றாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது.
மேலும்
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடந்ததால் வாக்கு எண்ணிக்கை
நீடித்தது. இதன் காரணமாக ஜனவரி 4ஆம் தேதியும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு ஜனவரி
6ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த
நிலையில் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்
என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நாளை சனிக்கிழமை பள்ளிகள்
இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அவர்கள் அறிவித்துள்ளார்
இதனை
அடுத்து நாளை சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆங்கிலோ
இந்தியன் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ
மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவறாமல் நாளை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக