Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஜனவரி, 2020

உக்ரைன் விமானமானது ரஷ்ய ரக ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது.!? என அமெரிக்கா குற்றச்சாட்டு .!

உக்ரைன் விமானமானது ரஷ்ய ரக ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது.!? என அமெரிக்கா குற்றச்சாட்டு .!


நேற்று முன்தினம் அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது.அதில் பயணம் செய்த பயணிகள் , விமான ஊழியர்கள்  என அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்த 2 கருப்புப்பெட்டிகளை யாரிடமும் கொடுக்கமுடியாது என ஈரான் கூறியது.



Image result for iran

இந்நிலையில் அமெரிக்க தரப்பில் இருந்து ஈரான் படையினர் தவறுதலாக தாக்கி இருக்கலாம் என கூறியுள்ளனர். செயற்கைக்கோள், ரேடார் கருவிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ததில் இரண்டு SA15  ரஷ்ய ரக ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது .

கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்ட்டின் பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தை ஈரான் ஏவுகணைகளை தாக்கியதாக கூறியுள்ளனர்.மேலும் எந்த வித உள்நோக்கத்துடன் ஈரான் மீது குற்றம் சாட்டவில்லை அவர் கூறினார்.
 
Image result for iran
பிரிட்டன் தரப்பிலிருந்து இதே கருத்து வெளியாகி வருகிறது. விபத்து குறித்து உக்ரேன் அதிபரிடம் தொலைபேசி வாயிலாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரங்கல் தெரிவித்தார். விபத்து நடந்த சூழலும், அதற்கான காரணம் இன்னமும் தெளிவாக  தெரியவில்லை என்பதால் ஐ.நா தலையிட்டு ஆய்வு  நடத்த வேண்டும் என  உக்ரைன்  வெளியுறவு துறை அமைச்சர் அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக