பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா
நெவால் பாஜகவில் இணைந்தார்.சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை
அலுவலகத்தில் சென்று சாய்னா நெவால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
சாய்னா
நேவால் ஹரியானாவில் பிறந்தவர்.இவர் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில்
ஒருவர்.இவர் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம்
வென்று உள்ளார். 2015 -ம் ஆண்டு இவர் உலக பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை
அடைந்த முதல் இந்திய பேட்மிண்டன் பெண் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது
சாய்னா நெவால் அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.பாஜகவில் இதற்கு முன் முன்னாள்
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு இணைந்து கடந்த ஆண்டு நடைபெற்ற
நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக
உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக