Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜனவரி, 2020

தன்னிடம் இருந்த ஒரே ஒரு உருப்படியான திட்டத்தை நீக்கிய வோடாபோன்! ஏன்?

Vodafone Idea நிறுவனம் அதன் ரூ.649 திட்டத்தை அதன் போஸ்ட்பெய்ட் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். தற்போது அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் வெறும் மூன்று திட்டங்கள் மட்டுமே உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வோடபோன் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக ரூ.649 மதிப்புள்ள ஐபோன் ஃபாரெவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது வோடபோன் இந்த ரூ.649 திட்டத்தை அதின் போஸ்ட்பெய்ட் போர்ட்போலியாவில் இருந்து நீக்கியுள்ளது.

இருப்பினும், வோடபோன் நிறுவனம் இந்த திட்டத்தை அகற்றுவதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இந்த நடவடிக்கைக்கு பிறகு வோடாபோன் நிறுவனத்திடம் தற்போது, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.999 உள்ளிட்ட மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உள்ளன.

ரூ.649 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

ரூ.649 மதிப்புள்ள ஐபோன் ஃபாரெவர் திட்டமானது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 200 ஜிபி அளவிலான டேட்டாவை கேரி ஃபார்வர்ட் செய்யும் வசதியுடன் கூடிய 90 ஜிபி அளவிலான டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் போன்ற நன்மைகளை வழங்கி வந்தது.

உடன் ரூ.999 மதிப்புள்ள இலவச அமேசான் ப்ரைம் சந்தா, ஒரு வருடத்திற்கான வோடபோன் ப்ளே மெம்பர்ஷிப், மொபைல் ஷீல்ட் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தா போன்ற நன்மைகளும் இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

வோடாபோன் இன்னும் உறுதி செய்யவில்லை!

வோடாபோன் வழியாக தொடர்ச்சியான போஸ்ட்பெய்ட் சேவைகளைப் பெற தற்போதுள்ள 649 திட்டத்தின் பயனர்கள் வேறு சில திட்டங்களுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என்று டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது, இருப்பினும் இந்த செய்தி வோடபோன் ஐடியாவால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

மீதமுள்ள மூன்று திட்டங்களை பொறுத்தவரை, என்ட்ரி லெவல் பிளான் ஆன ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமானது, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு, 40 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா மற்றும் 200 ஜிபி டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு முன்னோக்கி கொண்டு செல்லும் வசதி ஆகியவைகளை வழங்குகிறது.

ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, அடுத்த பில்லிங் சுழற்சிக்கு 200 ஜிபி அளவிலான டேட்டாவை முன்னோக்கி கொண்டு செல்லும் விருப்பம், வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ரூ.999 மதிப்புள்ள அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

கடைசியாக உள்ள ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டமானது பொழுதுபோக்கு, தொகுக்கப்பட்ட சர்வதேச ரோமிங் சேவைகள், சிறந்த டேட்டா வேகத்துடனான வரம்பற்ற டேட்டா, பிரீமியம் வாடிக்கையாளர் சேவை, விமான நிலைய ஓய்வகங்களுக்கான அணுகல், ஹோட்டல் முன்பதிவுகள், மொபைல்கள் மீதான சலுகைகளுக்கான அணுகல் மற்றும் பலவற்றை வழங்குகிறது.

இந்த வோடபோன் REDX திட்டம் ஆனது நெட்ஃபிலிக்ஸ், அமேசான் ப்ரைம், ZEE5 மற்றும் வோடபோன் ப்ளே போன்ற சந்தாக்களின் அணுகல்களையும் வழங்குகிறது. உடன் சாம்சங் சாதனங்களின் மீதான சலுகைகள் மற்றும் யுஎஸ்ஏ மற்றும் கனடாவுக்கான ஐஎஸ்டி அழைப்புகள் வெறும் 50 பை / நிமிடம் போன்ற சலுகைகளையும் வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக