சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையின்படி,
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய
தொலைத் தொடர்பு நிறுவனமாக உள்ளது, ஏனெனில் ஜியோ நிறுவனத்திடம் மொத்தம் 370
மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இருப்பினும் கூட ஜியோ தனது வளர்ச்சியை
நிறுத்துவதாய் இல்லை.
சத்தம்
போடாமல் களமிறங்கிய ஜியோ யுபிஐ (Jio UPI) சேவை!
ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோ தனது
பயனர்களுக்கான மற்றொரு சேவையை அறிமுகம் செய்துள்ளது, அது ஜியோ யுபிஐ (Jio UPI)
சேவை ஆகும். அதாவது ஜியோ நிறுவனம் தனது JioMoney ஆப்பில் யுபிஐ அம்சத்தை கொண்டு
வந்துள்ளது. இது ஜியோ சந்தாதாரர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கியுள்ளது.
ஆக நீங்களொரு ஜியோ பயனர் என்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் போன்பே அல்லது கூகுள் பே
போன்ற பணப்பரிமாற்ற ஆப்ஸ்கள் இருப்பின், அதை அன்இன்ஸ்டால் செய்ய நேரிடலாம்.
அனைவருக்கும்
கிடைக்கிறதா?
யுபிஐ அடிப்படையிலான கட்டண சேவையை
அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிடுவது பற்றி பல பேச்சுவார்த்தைகள் நடந்தன, ஆனால்
இப்போது இறுதியாக ஜியோ தனது சந்தாதாரர்களுக்கு யுபிஐ அடிப்படையிலான சேவையை ஒரு
குறிப்பிட்ட முறையில் வழங்கத் தொடங்கியுள்ளது என்பதை என்ட்ராக்ர்
உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது இந்த சேவையை ஒரு சில சந்தாதாரர்கள் மட்டுமே முதலில்
பெறுவார்கள், பின்னர் மெதுவாக, இது மற்ற பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் என்று
அர்த்தம். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த யுபிஐ சேவையைப் பற்றிய சிறந்த பகுதி
என்னவென்றால், இந்த சேவையானது மைஜியோ ஆப்புடன் ஒருங்கிணைத்துள்ளது. ஆக பணம்
செலுத்தும் நோக்கத்தின் கீழ் யுபிஐ-ஐ பயன்படுத்த விரும்பும் ஜியோ சந்தாதாரர்கள்
இதற்காக தனியாக ஒரு புதிய ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜியோ
பே உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்!
இந்த இடத்தில் ஜியோ சந்தாதாரர்களுக்கான
ஜியோபே மற்றும் இந்த ஜியோ யுபிஐ சேவை ஆகிய இரண்டும் வேறுபட்டவை என்பது நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும். சிலர் ஜியோவின் யுபிஐ சேவை மற்றும் ஜியோ பே சேவை ஆகிய
இரண்டும் ஒன்றுதன என்று நினைக்கலாம், அது தவறு. இந்த இரண்டு சேவையும்
வேறுபட்டவர்கள் ஆகும். இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய யுபிஐ சேவைக்கு எந்த
விதமான பெயரும் இதுவரையிலாக சூட்டப்படவில்லை.
ஆட்டம்
வேற மாதிரி இருக்கும்! ஏனெனில்...
ஆகமொத்தம் ஒன்றுமட்டும் தெளிவாக
புரிகிறது. ஃபோன்பே மற்றும் கூகுள் பே போன்ற ஆப்கள் ஆனது வரவிருக்கும் நாட்களில்
கடுமையான போட்டியை எதிர்கொள்ள உள்ளன. ஏனெனில் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருக்கும்
சந்தாதாரர் தளத்தின் எண்ணிக்கை அப்படி! இது தவிர்த்து கடந்த 2018 ஆண்டை விட, 2019
இல், யுபிஐ சேவைகளின் பயன்பாடானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆக இந்த 2020
இல் ஜியோவின் யுபிஐ ஆட்டம் வேற மாதிரி இருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக