வருமான வரி சட்டப்பிரிவு 139 AA (2)-யின் அடிப்படையில் ஜூலை 1,
2017 அன்று முதல் 10 இலக்க எண் கொண்ட பான் எண் வைத்திருப்போர் நிச்சயமாக ஆதார்
எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது அவசியம் என வருமான வரித்துறை அறிவித்தது.
பான் ஆதார் அட்டை இணைப்பு
பல்வேறு கால அவகாசத்திற்கு பிறகு
இறுதியாக ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31 ஆம் தேதி
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்கம்டேக்ஸ் இந்தியா பைலிங் என்ற இணையதளத்திற்கு
சென்று அல்லது புதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 567678 என்ற எண்ணுக்கு
எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வாக்காளர்களை கண்டறிய முடிவு
போலி வாக்காளர்களை தடுக்கும்
நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல்
ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் ஒரு அங்கமாக வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை
இணைக்க அதிகாரம் வழங்க வலியுறுத்தி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம்
கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதி இருந்தது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்
நீக்கப்படாது
அந்த கடிதத்தில் குறிப்பாக ஆதார்
எண்களை தர இயலவில்லை என்றாலும் கூட வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர் நீக்கப்படாது
எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் வாக்காளர் அட்டைகளை
ஆதார் எண்களுடன் இணைக்கும் போது எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள்
கடைபிடிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தை சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
இதையடுத்து பாதுகாப்பு அம்சங்கள்
குறித்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தது.
அதன்பின் வாக்காளர் அட்டைகளை மீண்டும் ஆதார் எண்களுடன் இணைப்பதற்கான தேர்தல்
ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய தேர்தல்
ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்களை இணைக்கும் கோரிக்கையை மத்திய சட்ட
அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் பணி தொடங்க வாய்ப்பு
மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
அளித்துள்ளதையடுத்து அடுத்தக்கட்டமாக வாக்காளர்கள் விரைவில் தங்களது வாக்காளர் அட்டைகளை
ஆதார் எண்களுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தேர்தல் ஆணையம் முன்னதாகவே 38 கோடி வாக்காளர்
அட்டைகளை ஆதார் உடன் இணைத்துள்ளது. தற்போது கூடுதல் பணியை விரைவாக தொடங்கலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக