Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 ஜனவரி, 2020

பிரதமர் மோடியை தொடர்ந்து மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

பிரதமர் மோடியை தொடர்ந்து மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்



டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்  பியர் கிரில்ஸ் இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார்.
காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி  உயிர் பிழைப்பது என்றும்  நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார் பியர் கிரில்ஸ்.இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் கலந்து கொண்டு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில்  கலந்து கொள்கிறார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் (Bandipur Tiger Reserve) நடைபெறுகிறது.மேன் vs வைல்ட்  நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில்  2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் ரஜினிகாந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக