ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு
மெக்சிகோவில் உள்ள ஒரு குகையில் தன் வாழ்க்கையை முடித்த பெண்ணின் மண்டை ஓட்டை
அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது மண்டையோடு மற்றும்
குறுகிய எலும்புகள் இவரின் கடினமான வாழ்க்கை மற்றும் வரலாற்றை வெளிப்படுத்துகிறது,
இவர் முதல் அமெரிக்கரா என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
முதல்
அமெரிக்கர்களின் வரலாறு வெளிவருமா?
முதல் அமெரிக்கர்களின் வரலாறு பற்றிய
துப்புகளையும் இந்த பெண்ணின் எலும்புக் கூடுகள் விவரிக்கும் என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். விஞ்ஞானிகள், சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஆசியாவை
வட அமெரிக்காவுடன் இணைக்கும் ஒரு நிலப் பாலத்தைப் பயன்படுத்திக் கடந்ததாகக்
கருதுகின்றனர். அதுமட்டுமின்றி இன்னும் சில உண்மைகளையும் விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு
டீனேஜ் பெண் உட்பட ஒன்பது எலும்புக்கூடு
ஒருகணம் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை
மேற்கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு குழு, யுகடான் பெனின்சுலாவில் உள்ள
சிங்க்ஹோல் குகைகளில் ஒரு டீனேஜ் பெண் உட்பட ஒன்பது நவீன பூர்வீக அமெரிக்கர்களின்
எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் மனிதர்கள் ஏற்கனவே சுமார்
12,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தெற்கே வந்துவிட்டதைக் குறிக்கிறது.
ரேடியோகார்பன்
டேட்டிங் முறை முடக்கம்
சான் ஹோல், என்ற யுகடான் குகை
மேப்பிங் கண்டுபிடிப்பாளர்கள், இந்த பெண்ணின் எலும்புக்கூட்டை, உப்புநீர் கலந்த
குகையிலிருந்து கண்டுபிடித்துள்ளார். உப்புநீரில் அதிக நாட்கள் இருந்ததால்
வழக்கமான வயது கண்டுபிடிக்கும் ரேடியோகார்பன் டேட்டிங் முறைகளைப் பயன்படுத்த
முடியாமல் போய்விட்டது. உப்பு நீர் எலும்புகளிலிருந்த கொலாஜன் குறைத்துவிட்டது.
இருந்தும் விஞ்ஞானிகள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை.
பெண்ணின்
எலும்புக்கூடுக்கு 9,900 வயது உண்மையா?
புதிய முயற்சியை மேற்கொண்டு பெண்ணின்
எலும்பிலிருந்த ஸ்டாலாக்டைட்டுகளிலிருந்து, கால்சைட் தாது வைப்புகளில் காணப்பட்ட
குறைந்த அளவு யுரேனியம் மற்றும் தோரியம் அளவை வைத்து, பெண்ணின் எலும்புக்கூடு
குறைந்தது 9,900 வயது இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவல் இரண்டு
தினங்களுக்கு முன்பு விஞ்ஞானிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மண்டையில்
இருந்த மூன்று காயங்கள்
அதுமட்டுமின்றி, அந்த பெண்ணின் அசல்
வயது 30 வயதிற்குள் இருக்கும் என்றும், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு, உணவு
கட்டுப்பாட்டுடன் வாழ்ந்ததாக அவர் பல் துவாரங்கள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அந்த
பெண் எப்படி மரணமடைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக,
அவர் மூன்று மண்டை காயங்களுடன் உயிர் வாழ்ந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பாக்டீரியா
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்
இந்த மூன்று மண்டை காயங்கள் அனைத்துமே
குணமடைந்ததைத் தடங்கல் காட்டுகின்றது. மேலும் பாக்டீரியா தொற்றுநோயால் இந்த பெண்
பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த பெண்ணின்
மண்டையோட்டுடன், இதற்கு முன்பு மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டுடன்
ஒப்பிடுகையில் இரண்டும் தனித்துவமானதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள்
கூறியுள்ளார்.
மரபணு
ஆய்வின் முடிவு
ஆகையால் சுமார் 12,000 முதல் 8,000
ஆண்டுகளுக்கு முன்பு மெக்ஸிகோவில் இரண்டு விதமான மனித குளங்கள் வாழ்ந்து
வந்துள்ளது உறுதியாகியுள்ளது. இரண்டு மனித மண்டை ஓடுகளும் வெவ்வேறு புவியியல்
தோற்றங்களைக் கொண்டிருந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் காணப்பட்ட எலும்புகளின்
மரபணு ஆய்வுகள் இவர்கள் வெவ்வேறு சூழ்நிலையில் சூழல்களுக்கு விரைவாகத் தழுவி
வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக